ஹைதராபாத்: 2024ஆம் ஆண்டு விளையாட்டு ஆர்வலர்கள் கண்டு மகிழ்ந்திட ஆண்டு தொடக்கம் முதல் கால்பந்து, டென்னிஸ், 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை என பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அந்த போட்டிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து (AFC Asian Cup - Football)
நடைபெறும் தேதி ஜனவரி 12 முதல் பிப்ரவரி 10 வரை
கத்தார் நாட்டில் 2022 ஃபிபா உலகக் கோப்பைக்கு பிறகு ஆசிய கோப்பை 2024 கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பலம் வாய்ந்த ஆசிய அணிகள் மோதுகின்றன. இந்தியாவின் நட்சத்திர கால்பந்து வீரர் சுனில் சேத்ரி இந்த தொடரோடு சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் (australia open) Tennis
தேதி ஜனவரி 14 முதல் ஜனவரி 28 வரை
இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவான் வீரர்களின் ஒருவரான ரஃபேல் நடால் ஒரு வருடத்திற்கு பிறகு களமிறங்கவுள்ளார். சர்வதேச டென்னிஸ் வீரர்களின் ரேங்கிங் பட்டியலில் டாப் 100 ஆடவர் ஒற்றையர் பிரிவில் இருந்து வெளியேறினார்.
ஐசிசி 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை (ICC U19 cricket world cup)
தேதி ஜனவரி 19 முதல் பிப்ரவரி 11 வரை
இந்த வருடத்தின் முதல் மிகப்பெரும் கிரிக்கெட் விளையாட்டு தொடர். வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
பிரெஞ்சு ஓபன் (French open)
தேதி மே 20 முதல் ஜூன் 9 வரை
ரஃபேல் நடால் சிறப்பாக விளையாடக்கூடிய களிமண் தரையில் களமிறங்கவுள்ளார். நடால் இதுவரை அதிக பிரெஞ்சு ஓபன் தொடர் (14) வென்ற வீரர் ஆவார். இடது கை வீரரான நடால் இந்த பிரெஞ்சு ஓபன் தொடரில் ஜோகோவிச், கர்லோஸ் அல்காரஸ், டானில் மெத்வெதேவ் உள்ளிட்ட பல வீரர்களுடன் மோதவுள்ளார்.
ஐசிசி ஆண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை (ICC Men's T20 World cup)
தேதி ஜூன் 4 முதல் ஜூன் 30 வரை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு வருடமும் ஒரு ஐசிசி தொடரை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் 20 ஓவர் கிரிக்கெட் ஆண்கள் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 13 ஆண்களுக்கு பிறகு ஐசிசி கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
யூரோ கோப்பை கால்பந்து (Euro football)
தேதி ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை
கால்பந்து ரசிகர்கள் யூரோ கோப்பையின் மூலம் சில தரமான கால்பந்து போட்டிகளை காண காத்திருக்கின்றனர். இந்த யூரோ கோப்பையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிலியான் பாப்பே, கரிம் பென்சீமா, ராபர்ட் லெவண்டோஸ்கி ஆகியோர் விளையாடவுள்ளனர். அதேபோல ரொனால்டோ விளையாடும் கடைசி யூரோ கோப்பை என கருதப்படுவதால் இதில் வெல்ல முனைப்பு காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விம்பிள்டன் டென்னிஸ் (wimbledon)
தேதி ஜூலை 1 முதல் 14 வரை
இந்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கு பயிற்சி பெறும் விதமாக இந்த விம்பிள்டன் போட்டிகள் புல்வெளி தரையில் நடைபெறவுள்ளது. நடப்பு விம்பிள்டன் சாம்பியனான கார்லஸ் அல்காரஸ் இந்த தொடர் கடும் போட்டி வாய்ந்ததாக அமையும்.
ஒலிம்பிக்ஸ் Olympics
தேதி ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை
ஆசிய விளையாட்டு 2023இல் பல்வேறு பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்தியா, உலக அளவில் மிகப்பெரும் விளையாட்டு தொடரான பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராஒலிம்பிக்ஸ் 2024 ஆகிய தொடர்களில் சாதிக்க காத்திருக்கிறது.
யூ எஸ் ஓபன் டென்னிஸ் (US Open)
தேதி ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 8 வரை
யூ எஸ் ஓபன் தொடர் பழம்பெரும் விளையாட்டு தொடர்களில் ஒன்றாகும். ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்த பிறகு நடைபெறுதால் ஒரு சில வீரர்கள் யூ எஸ் ஓபனில் விளையாடுவது சந்தேகமாகும்.
பிடபிள்யூ எஃப் வேர்ல்டு டூர் (BWF World Tour Finals)
தேதி டிசம்பர் 11 முதல் டிசம்பர் 15 வரை
சீனாவில் உள்ள ஹாங்சோவ் மாகாணத்தில் பிரபல பேட்மிண்டன் வீரர்கள் விளையாடும் போட்டிகள் நடைபெறும்.
இதையும் படிங்க: உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் மாக்னஸ் கார்ல்சன்!