ETV Bharat / sports

பெர்லின் ஒலிம்பிக்: இது ஹிட்லர் காலத்தின் நினைவு ஓட்டம் - ஜேம்ஸ் கிளீவ்லேண்ட் ஓவன்ஸ்

1936ஆம் ஆண்டு ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற பெர்லின் ஒலிம்பிக்கில் அந்நாடு 89 பதக்கங்களுடன் முதலிடத்தையும், அமெரிக்கா 56 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

1936 பெர்லின் ஒலிம்பிக், ஹிட்லர்
ஹிட்லர் காலத்தின் ஒலிம்பிக்
author img

By

Published : Jul 21, 2021, 7:29 PM IST

Updated : Jul 21, 2021, 9:01 PM IST

அடோல்ப் ஹிட்லர் குறித்து பேச்சு ஆரம்பித்தாலே, யூத இனப்படுகொலைதான் அனைவரின் நினைவுக்கும் வரும். அப்படிப்பட்ட ஹிட்லர், ஜெர்மனியை ஆண்ட காலத்தில் நடைபெற்ற 1936 ஒலிம்பிக் தொடரைப் பற்றி யாருக்கும் பெரிதாகத் தெரிந்திருந்திருக்க வாய்ப்பில்லை.

1931ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) கூட்டத்தில் 1936 கோடைகால ஒலிம்பிக் தொடர் நடத்தும் உரிமை ஜெர்மனிக்கு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பை அடுத்த இரண்டு ஆண்டில், அதாவது 1933இல் தனது சர்வாதிகாரத்தை ஜெர்மனியில் முழுமையாக நிலைநாட்டிவிட்டார் ஹிட்லர்.

ஆரிய ஆதிக்கத்தின் மேடை

ஹிட்லரின் நாஜி பரப்புரையில் ஆரிய மரபணு மட்டுமே உயர்ந்தது என்ற கருத்துண்டு. ஐந்த கண்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற 1936 ஒலிம்பிக்கை, தனது ஆரிய ஆதிக்கத்தை காட்சிப்படுத்தக்கூடிய மேடையாகத்தான் ஹிட்லர் பார்த்தார்.

ஆரிய இனத்தவர் மட்டுமே இந்தத் தொடரில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதுதான் ஹிட்லரின் கனவாக இருந்தது.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் யூத விளையாட்டு வீரர்களும் ஜெர்மனியின் மனநிலையைப் புரிந்துகொண்டு, பெர்லின் ஒலிம்பிக்கில் பங்கேற்பதில் முரண்பட்டனர். அங்குள்ள மனித உரிமை இயக்கங்களும் பெர்லின் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்கும்படி அவர்களை வலியுறுத்தின.

மேலும், பெர்லினின் தெருக்கள்தோறும் நாஜிகளின் கொடிகளும், துண்டறிக்கைகளும் அதிகமாகக் காணப்பட்டன. இது, யூதர்களைப் பெரும் கவலைக்குள்படுத்தியது.

ஒரே ஒரு யூதர்

இவ்வளவு, அச்சுறுத்தலுக்கப் பிறகும் அந்த ஒலிம்பிக் தொடரில் ஜெர்மனி சார்பாக ஒரே ஒரு யூதர் மட்டுமே பங்கேற்றார். வாள்வீச்சு வீராங்கனையான ஹெலன் மேயரின் தாய் யூதர் அல்லாத காரணத்தினாலும், அந்தக் காலக்கட்டத்தின் சிறந்த வாள்வீச்சாளர் என்பதாலும்தான் அவர் ஒலிம்பிக்கில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், பதக்கம் கொடுக்கும் விழாவில் அவர் அனைவருக்கும் முன் அடித்த அந்த நாஜி 'சல்யூட்'தான், பின் நாள்களில் அவரையும் அவரது குடும்பத்தையும் வதை முகாமிலிருந்து காத்தது.

இனவெறியின் மத்தியில் சாதனை

அந்த ஒலிம்பிக் தொடர் முழுவதும் ஹிட்லரின் செயல்திட்டங்கள்தான் நிறைவேறிவந்தன. ஆனால், ஹிட்லரின் கனவு 22 வயதான இளைஞரால் சுக்குநூறாக உடைக்கப்பட்டது.

1936 பெர்லின் ஒலிம்பிக், ஹிட்லர்
1936 பெர்லின் ஒலிம்பிக்

அமெரிக்காவைச் சேர்ந்த தடகள வீரர் ஜேம்ஸ் கிளீவ்லேண்ட் ஓவன்ஸ் 100 மீ, 200 மீ, 4x100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் என அனைத்திலும் வென்று நான்கு தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.

கறுப்பினத்தவரான ஜேம்ஸின் தாத்தா அடிமையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனி மக்களின் அத்தனை இனவெறிக் கூச்சலுக்கு முன், உயரம் தாண்டுதலில் 8.1 மீ தாண்டி பெரும் சாதனையைப் படைத்தார் ஜேம்ஸ். இந்தச் சாதனையை அடுத்த 25 ஆண்டுகளில் யாராலும் உடைக்க முடியவில்லை என்பது தனிக்கதை.

போருக்குப் பின்...

எவ்வாறாயினும், 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் ஜெர்மனி 89 பதக்கங்களுடன் முதலிடத்தையும், அமெரிக்கா 56 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. 1936-க்கு முன்னர் ஜெர்மனி சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற அத்தனை யூத வீரர்களும் வதை முகாம்களில் கொல்லப்பட்டனர்.

அதன்பின்னர், இரண்டாம் உலகப்போர் தொடங்கப்பட்டதால், இரண்டு ஒலிம்பிக் தொடர்கள் ரத்துசெய்யப்பட்டன. இதற்கடுத்து, ஒலிம்பிக் தொடர் சுவிட்சர்லாந்தில் 1948இல் நடைபெற்றது.

இதையும் படிங்க: பதக்க வேட்டைக்குக் காத்திருக்கும் இந்திய ஒலிம்பிக் குதிரைகள்

Last Updated : Jul 21, 2021, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.