கரோனா வைரஸ் காரணமாக கால்பந்து போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பார்வையாளர்களின்றி ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த போட்டியில் வெர்டர் அணியை எதிர்த்து வொல்ஃபெர்க் அணி ஆடியது. முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. ஆட்டத்தில் கோல் இல்லாமல் டிராவில் முடியும் என எதிர்பார்த்த நிலையில், 82ஆவது நிமிடத்தில் வொல்ஃபெர்க் அணியின் வோட் வெகோர்ஸ்ட் கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார்.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் முடிவில் வேறு எந்த கோல்களும் விழாததால், வெர்டர் அணியை வொல்ஃபெர்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் வொல்ஃபெர்க் அணி புள்ளிப்பட்டியலில் 45 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் ஐரோப்பா கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் வொல்ஃபெர்க் அணிக்கு உருவாகியுள்ளன.