ஜெர்மனி நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்குள் வந்த பிறகு, அந்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடப்பு சீசனுக்கான பன்டேஸ்லிகா கால்பந்து தொடரை பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆர்.பி.லீப்ஜிக் அணி எஃப்சி கோல்ன் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய ஏழாவது நிடத்திலேயே கோல்ன் அணியின் ஜான் கார்டோபா கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடக்கி வைத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லீப்ஜிக் அணியின் பேட்ரிக் 20 ஆவது நிமிடத்தில் கோலடிக்க, அவரைத் தொடர்ந்து ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் அந்த அணியின் கிறிஸ்டோபர் கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினர். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் லீப்ஜிக் அணி 2-1 என்ற கோல்கணக்குடன் முன்னிலையில் இருந்தது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட லீப்ஜிக் அணியின் டிமோ வார்னர் 50ஆவது நிமிடத்திலும், டேனி 57ஆவது நிடத்திலும் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து அசத்தினர். இறுதிவரை போராடிய கோல்ன் அணியால் இரண்டு கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது .
இதன்மூலம் ஆட்ட நேர முடிவில் ஆர்.சி.லீப்ஜிக் அணி 4-2 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோல்ன் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. இதன் மூலம் பன்டேஸ்லிகா தொடரின் புள்ளிப்பட்டியலில், ஆர்.சி.லீப்ஜிக் அணி 58 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், எஃப்சி கோல்ன் அணி 34 புள்ளிகளுடன் 11ஆவது இடத்திலும் நீடிக்கிறது.
இதையும் படிங்க:'ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நீதி' - மண்டியிட்டு அஞ்சலி செலுத்திய லிவர்பூல் அணியினர்