ETV Bharat / sports

சீரி ஏ: டிராவில் முடிந்த ஜுவென்டஸ் - வெரோனா ஆட்டம்! - கிறிஸ்டியானோ ரொனால்டோ

சீரி ஏ கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற ஜுவென்டஸ் - வெரோனா அணிகளுக்கு இடையேயான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Watch: CR7 on target but Juventus held for draw at Hellas Verona

author img

By

Published : Feb 28, 2021, 4:43 PM IST

இத்தாலியின் பிரபல கால்பந்து தொடரான சீரி ஏ தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று (பிப்.28) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி, வெரோனா அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால், இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலேதுமின்றி சமனில் இருந்தது.

இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் போது, ஜுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 49ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஜுவென்டஸ் - வெரோனா

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெரோனா அணியின் அண்டோனின் பராக் ஆட்டத்தின் 77ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியைத் தோல்வியிலிருந்து மீட்டார்.

இதன் மூலம் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால், இப்போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஐஎஸ்எல்: பரபரப்பான ஆட்டத்தில் ஒடிசா எஃப்சி அணி த்ரில் வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.