பிரேசில் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மார் அடுத்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பை குறித்து முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். நெய்மாரின் வாழ்க்கை குறித்த டாக்குமென்டரி படத்தில் இதை அவர் பேசியுள்ளார்.
2022 கால்பந்து உலகக்கோப்பை குறித்து பேசிய நெய்மார், அடுத்த உலகக்கோப்பையை எனது கடைசி உலகக்கோப்பையாக நினைத்து விளையாடப்போகிறேன். அதற்கு பிறகும் விளையாட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தயாராக இருப்பேனா எனத் தெரியவில்லை. எனவே, வெற்றிபெற அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
நாட்டிற்காக உலகக்கோப்பை வெல்வது எனது கனவாகும். அதை என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார். 2014, 2018 என இரு உலகக்கோப்பை விளையாடியுள்ள நெய்மாருக்கு உலக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற கனவு இதுவரை நிறைவேறாமல் உள்ளது.
கோபா அமெரிக்கா கோப்பை, ஒலிம்பிக் தங்கம் போன்ற முக்கிய மைல்கல்லை நெய்மார் வென்றுள்ள நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் உலக்கோப்பையை வென்றே தீர வேண்டும் என நோக்கில் விளையாடவுள்ளார் நெய்மார்.
இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை - வெற்றிபெற்றால் 12 கோடி ரூபாய்