ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 6ஆவது சீசன் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் நேற்றைய லீக் ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்திலிருக்கும் ஜம்ஷெத்பூர் அணியை எதிர்த்து 7ஆவது இடத்திலிருக்கும் கேரளா அணி விளையாடியது. சொந்த மண்ணில் ஆடியதால், கேரளா அணி மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த இரு அணிகளுக்கிடையிலான ஆட்டம் தொடங்கியதிலிருந்தே ஜம்ஷெத்பூர் அணி வீரர்களின் ஆட்டம் ஆக்ரோஷமாக இருந்தது. இந்த ஆட்டத்தின் 37அவது நிமிடத்தில் கேரள அணியின் தவறால், ஜம்ஷெத்பூர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதன் பலனாக அந்த அணி வீரர் பிடி, 38ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். இதையடுத்து முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் 1-0 என ஜம்ஷெத்பூர் அணி முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம்பாதி ஆட்டத்தில் கேரள அணி வீரர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால் ஜம்ஷெத்பூர் அணி வீரர் வினீத், ஆட்டத்தின் 71ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடிக்க, கிட்டத்தட்ட வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
-
📽 | With a spirited brace, he overturned @KeralaBlasters' fortunes tonight!
— Indian Super League (@IndSuperLeague) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Relive Hero of the Match, Messi Bouli's performance in #KBFCJFC 👏#HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/IDWnKNnhAZ
">📽 | With a spirited brace, he overturned @KeralaBlasters' fortunes tonight!
— Indian Super League (@IndSuperLeague) December 13, 2019
Relive Hero of the Match, Messi Bouli's performance in #KBFCJFC 👏#HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/IDWnKNnhAZ📽 | With a spirited brace, he overturned @KeralaBlasters' fortunes tonight!
— Indian Super League (@IndSuperLeague) December 13, 2019
Relive Hero of the Match, Messi Bouli's performance in #KBFCJFC 👏#HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/IDWnKNnhAZ
ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாய் கேரள அணியின் மெஸ்ஸி 75ஆவது நிமிடத்தில், கேரள அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்புக்கு ஏற்றார்போல், ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் கேரள அணி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆட, 87ஆவது நிமிடத்தில் கேரள அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இந்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய கேரள அணி வீரர் மெஸ்ஸி, இரண்டாவது கோலை அடித்து 2-2 என சமன் செய்தார். இதையடுத்து இரண்டாம்பாதி 2-2 என சமனில் முடிவடைந்தது. பின், கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் இருஅணிகளும் கோல்கள் அடிக்காததால், ஆட்டம் 2-2 என சமனில் முடிவடைந்தது.
இதையும் படிங்க: பூமா நிறுவனத்துடன் ஒப்பந்தமான இந்திய அணி கேப்டன்!