கோவிட்-19 பெருந்தொற்றால் உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கால்பந்து உள்ளிட்ட ஒரு சில விளையாட்டு தொடர்கள் மட்டும் பார்வையாளர்களின்றி தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தென் கொரிய கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படும் கே-லீக் கால்பந்து தொடர் பார்வையாளர்களின்றி, கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் நேற்றைய போட்டியின் போது, பிரபல கிளப் அணியான சியோல் எஃப்சி, பார்வையாளர்கள் இருக்கையில், "செக்ஸ் டால்"கள் நிரப்பி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்போட்டியை ஆன்லைன் வாயிலாக கண்ட ரசிகர்கள் சிலர் தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதனையடுத்து, தென் கொரிய கால்பந்து கிளப் சியோல் எஃப்சி ரசிகர்களிடம் மன்னிப்புக்கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‘கே-லீக் தொடரின் போது, மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் இருக்கையில், செக்ஸ் டால்களை கொண்டு நிரப்பியதோடு, ரசிகர்களின் மனதை புண்படுத்தியதற்காக கிளப் சார்பாக மன்னிப்புக் கோருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்களை கொச்சைப்படுத்தும் வகையில், மைதானத்தின் பார்வையாளர் இருக்கையில் செக்ஸ் டால்களை வைத்த சியோல் எஃப்சி அணிக்கு 100 மில்லியன் வன்(இந்திய மதிப்பீல் ரூ.61 லட்சம்) தொகையை அபராதமாக தென் கொரிய கால்பந்து கூட்டமைப்பு விதித்துள்ளது.
இதையும் படிங்க:பார்வையாளர்கள் இருக்கையில் 'செக்ஸ் டால்ஸ்' - மன்னிப்புக் கோரிய தென் கொரிய கால்பந்து கிளப்!