'சூப்பர் கேப்டன்' என்று கால்பந்து ரசிகர்களால் அழைக்கப்படும் சுனில் சேத்ரி, இந்திய அணிக்காக 2005ஆம் ஆண்டு அறிமுகமானார். அன்றிலிருந்து இன்றுவரை சர்வதேச அளவில் இந்திய அணிக்காக 118 போட்டிகள், 74 கோல்கள் அடித்துள்ளார்.
அந்தவகையில் சேத்ரி உலகளவில் நான்காவது இடத்தில் உள்ளார். அவரின் 34ஆவது பிறந்தநாளன்று, ஆசிய கால்பந்து சம்மேளனம் சார்பாக 'ஆசியன் ஐகான்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
தனது இளம் வயதிலேயே கால்பந்துப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய இவர், 2002ஆம் ஆண்டில் மோகன் பகான் அணிக்காகவும், ஜேசிடி அணிக்காகவும் 21 போட்டிகளில் பங்கேற்று 48 கோல்களை அடித்தார். அதையடுத்து மேஜர் லீக் சாக்கர் தொடரில் கன்சாஸ் சிட்டி அணிக்காகவும் ஆடினார்.
பின்னர் ஐ லீக் கால்பந்துத் தொடரில் சிராக் மற்றும் மோகன் பகான் அணிகளுக்காக ஆடத்தொடங்கினார். இவரது வருகைக்கு பிறகு இந்திய கால்பந்து அணி 2007, 2009, 2012 ஆகிய ஆண்டுகளில் நேரு கோப்பையையும், 2011ஆம் ஆண்டு எஸ்ஏஎஃப்எஃப் கோப்பையையும் கைப்பற்றியது.
இவருக்கு இந்திய அரசு சார்பாக 2011ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும், 2018ஆம் ஆண்டு ஏஎஃப்சி ஐகான் விருதும், 2019ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், அதே ஆண்டில் டெல்லி கால்பந்து சங்கம் சார்பாக கால்பந்து ரத்னா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
-
Happy Birthday skip. I hope you have a blessed day like every other day in your life & I always wish you the best. I'm grateful for our friendship that's been formed very organically and contrary to belief, we've majorly connected on Delhi street food memories. 😂 @chetrisunil11
— Virat Kohli (@imVkohli) August 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy Birthday skip. I hope you have a blessed day like every other day in your life & I always wish you the best. I'm grateful for our friendship that's been formed very organically and contrary to belief, we've majorly connected on Delhi street food memories. 😂 @chetrisunil11
— Virat Kohli (@imVkohli) August 2, 2021Happy Birthday skip. I hope you have a blessed day like every other day in your life & I always wish you the best. I'm grateful for our friendship that's been formed very organically and contrary to belief, we've majorly connected on Delhi street food memories. 😂 @chetrisunil11
— Virat Kohli (@imVkohli) August 2, 2021
இந்த நிலையில், சுனில் சேத்ரி இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டரில், "உங்கள் வாழ்க்கையின் எல்லா நாள்களையும் போலவே இன்றும் உங்களுக்கு ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாள். உங்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விரல் நுனியில் பேட்: ட்ரெண்டாகும் விராட், அனுஷ்கா காணொலி