வரும் 20ஆம் தேதி ஐஎஸ்எல் கால்பந்து தொடர் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் ஆயத்தமாகி வரும் சூழலில், எஃப்.சி. கோவா அணி அறிவிப்பி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வீடியோ கான்ஃபெரன்சில், நாடு தழுவிய கால்பந்து முகாம் நடத்தும் திட்டத்தை அறிமுகம் செய்தனர். இதற்காக பண்டஸ்லிகா தொடரின் நட்சத்திர அணியான ஆர்பி லெய்ப்ஸிக் அணியுடன் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து எஃப்.சி. கோவா அணியின் தலைவரான அக்ஷய் டான்டன் கூறுகையில், '' இந்திய கால்பந்து வீரர்களின் திறனை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவது தான் எங்களின் நோக்கம். இப்போது செய்துள்ள ஒப்பந்தம் மூலம் ஆர்பி லெய்ப்ஸிக் அணியின் பயிற்சியாளர்கள் இந்தியாவுக்கு வந்து சில முகாம்களை நடத்துவர். அதேபோல் நமது பயிற்சியாளர்களும், வீரர்களும் ஜெர்மனிக்கு சென்று பயிற்சி மேற்கொள்வார்கள். இதன்மூலம் எங்களின் நோக்கத்திற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
2009ஆம் ஆண்டு ஆர்பி லெய்ப்ஸிக் அணி தொடங்கப்பட்டது. இவர்களை அனைவரு ரெட் புல்ஸ் என அழைப்பர். இந்த 11 ஆண்டுகளில் 2016ஆம் ஆண்டு முதல் பண்டஸ்லிகா தொடரில் பங்கேற்று வருகிறது. அதேபோல் 2017-18ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் தொடரிலும், 2019-20ஆம் ஆண்டுகளில் ப்ரீமியர் லீக் தொடரில் அரையிறுதிக்கும் முன்னேறி ஆச்சரியமளித்தது.
இந்த ஒப்பந்தம் பற்றி ஆர்பி லெய்ப்ஸிக் அணியின் சிஒஒ மிண்ட்ஸ்லெஃப் கூறுகையில், '' எஃப்.சி. கோவா அணியுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகள் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. இந்திய மார்க்கெட்டில் கால்பந்து விளையாட்டு வளர்ந்து வருவது எங்களின் எதிர்காலத்திற்கு நல்லது. இந்த ஒப்பந்தம் மூலம் பண்டஸ்லிகா தொடரும் இந்தியாவில் பிரபலமாகும்'' என்றார்.
இதையும் படிங்க: பயோ பபுள் சூழல் அவ்வளவு எளிதானதல்ல - சுனில் ஷேத்ரி