ETV Bharat / sports

கோபா அமெரிக்கா கால்பந்து: இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பிரேசில்

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்திய பிரேசில் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

football
author img

By

Published : Jul 3, 2019, 2:59 PM IST

பிரேசிலில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், சமபலம் வாய்ந்த பிரேசில், அர்ஜென்டினா அணிகள் மோதின.

கடந்த 2007ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா பைனுலக்கு பின் இதுபோன்ற பெரிய தொடரில் பரம எதிரிகளான இரு அணியும் மோதுவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் நேற்றைய போட்டியில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் களமிறங்காதது உள்ளூர் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி எளிதில் வெல்லக்கூடும் என்ற நம்பிக்கையில் அந்நாட்டு ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்த சூழலில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் கேப்ரியல் ஜீசஸ் கோல் அடித்து அசத்தினார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் 71ஆவது நிமிடத்தில் மற்றொரு பிரேசில் வீரர் ராபர்டோ ஃபிர்மினோ இரண்டாவது கோல் அடித்து கோல் முன்னிலையை இரண்டாக அதிகப்படுத்தினார்.

அர்ஜென்டினா வீரர்கள் பலமுறை கோல் அடிக்க முயற்சித்தும், அதை பிரேசில் வீரர்கள் தங்களின் சிறப்பான தடுப்பாட்டத்தால் தவிடுபொடியாக்கினர். அதன்பின் இறுதி வரை எந்த அணியும் மேற்கொண்டு கோல் அடிக்காததால், பிரேசில் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

நாளை நடைபெற உள்ள மற்றொரு அரையிறுதிப் போட்டியில், சிலி மற்றும் பெரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெரும் அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரேசில் அணியை எதிர்த்து ஆடும். பிரேசில் அணி 10ஆவது முறையாக கோபா அமெரிக்கா பட்டத்தை கைப்பற்றும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Intro:Body:

copa america

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.