அமெரிக்கா: விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானங்களில், பார்வையாளர்களாக அமர்ந்திருப்போர் தங்கள் காதலனுக்கோ அல்லது காதலிக்கோ ப்ரொபோஸ் செய்வது என்பது வாடிக்கையாக நடக்கக்கூடிய ஒன்று. ஆனால், நேற்று அமெரிக்காவில் கால்பந்து வீரர், மைதானத்தில் ப்ரொபோஸ் செய்த காணொலிதான் நெட்டிசன்களுக்கான இன்றைய "ஹார்ட்" டாபிக்.
மேஜர் லீக் சாக்கர் (Major League Soccer) எனும் கால்பந்து தொடரில் மினசோட்டா எஃப்சி அணிக்காக விளையாடிவருபவர் ஹஸ்ஸானி ஸ்டீபென்சன். இவர் நேற்றைய போட்டிக்கு முன்னர், தனது காதலி பெட்ரா வுகோவிக்கிடம் தன்னுடைய திருமண விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதற்கு பெட்ரா, பெரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து ஸ்டீபென்சனின் காதலை ஏற்றுக்கொண்டார்.
-
SHE SAID YES 💍
— Minnesota United FC (@MNUFC) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
CONGRATS TO HASSANI AND PETRA pic.twitter.com/Jl5fYxP01M
">SHE SAID YES 💍
— Minnesota United FC (@MNUFC) July 4, 2021
CONGRATS TO HASSANI AND PETRA pic.twitter.com/Jl5fYxP01MSHE SAID YES 💍
— Minnesota United FC (@MNUFC) July 4, 2021
CONGRATS TO HASSANI AND PETRA pic.twitter.com/Jl5fYxP01M
அனுபவம் புதுமை
![ஹஸ்ஸானி டோட்சன் ஸ்டீபென்சன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12365398_fb.jpg)
பின், இருவரும் கட்டியணைத்து மைதானத்தில் முத்தம் கொடுத்து தங்களின் காதலை வெளிப்படுத்த, மைதானத்தில் இருந்த அனைவரும் ஆரவாரமாய் இணையருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதுகுறித்து பெட்ரா வுகோவிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்," அந்த தருணத்தை என்னால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. எங்களுக்கு ஆதரவு தெரவித்ததற்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார். தற்போது, ஸ்டீபென்சன் - பெட்ரா இணையரின் புகைப்படங்களும், காணொலியும் தற்போது அனைவராலும் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.