ETV Bharat / sports

விஜய் ஹசாரே டிராபி - 6 விக்கெட்கள் வீழ்த்தி யுஸ்வேந்திர சஹல் அசத்தல்! - சஞ்சு

ஆசிய கோப்பை, உலகக் கோப்பை என தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்ட இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

Yuzvendra Chahal claims 6-wicket haul in Vijay Hazare Trophy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 9:54 PM IST

அகமதாபாத்: ஒருநாள் உலகக் கோப்பை தொடர் கடந்த 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று (நவம்பர்.23) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியுள்ளது. இத்தொடரில் யுஸ்வேந்திர சாஹல் இடம் பெறாதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

  • One way or another, work will be rewarded. 📈
    Happy to contribute for my team and thanks for all your messages. Onto the next one. 🚀 pic.twitter.com/SG1pwPCNts

    — Yuzvendra Chahal (@yuzi_chahal) November 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆசிய கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என தொடர்ந்து நிராகரித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இப்படி தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பானது மறுக்கப்படுவது அவரது கரியரை முடிவுக்கு கொண்டு வரலாம் என ரசிகர்கள் தங்களது வருத்தத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், லெக் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹல் விஜய் ஹசாரே டிராபி தொடரில் உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடரில் ஒன்றான விஜய் ஹசாரே டிராபி இன்று தொடங்கியது. 38 அணிகள் பங்கேற்றுள்ளன. தலா 8 அணிகள் கொண்ட 3 பிரிவுகள் மற்றும் தலா 7 அணிகள் கொண்ட 2 பிரிவுகள் என மொத்தம் 5 பிரிவுகளாக ரவுண்ட ராபின் சுற்றில் மோதி வருகின்றன.

ஹரியானா அணியை சேர்ந்த சாஹல் இன்று உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்களை வீசினார். அதில் 26 ரன்களை விட்டு கொடுத்த அவர் 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். உத்தரகாண்ட் அணியின் வீரர் அகில் ராவத் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 200 விக்கெட்களை பெற்றார். இப்படி விக்கெட்களை எடுத்து அசத்தும் லெக் ஸ்பின்னரை இந்திய அணியில் நிராகரிப்பது வருத்தம் அளிக்கிறது.

இந்திய அணிக்காக இவர் இதுவரை 72 ஒருநாள் போட்டிகள் மற்றும் 80 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் மொத்தமாக 217 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலகக் கோப்பை 2023; சாதனைகள், தோல்விகள், வலிகள் என்னென்ன? - ஓர் அலசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.