கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை 37வது லீக் ஆட்டத்தில் இந்திய - தென் ஆப்பிரிக்கா அணி மோதுகின்றன. இந்த போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்கள் ஆன்லைன் "புக் மை ஷோ" மூலமாக விற்கப்பட்டது. இந்நிலையில், ஆன்லைனில் விற்கப்படும் டிக்கெட்களை பிளாக்கில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஆன்லைனில் விற்கப்படும் 2,500 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்களை 11,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை விற்கப்படுவதாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக பல்வேறு இடங்களில் 7 பேர் கைதாகி உள்ளனர். இந்த நிலையில், இது தொடர்பாக இன்று (நவ.03) கொல்கத்தா காவல் துறையினர் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலியின் சகோதருமான சினேஷிஸ் கங்கோபாத்யாய்-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேலும், புக் மை ஷோவின் அதிகாரிகளை மைதான் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக நேற்று (நவ.02) முதல் கிரிக்கெட் ஆர்வலர்கள் சிலர் ஈடன் கார்டன்ஸ் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்குச் சற்று பதற்றமான சூழல் நிலவி வருவதால், அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து கொல்கத்தா காவல் ஆணையர் கூறுகையில்; "இது தொடர்பான விசாரணையை நாங்கள் நடத்தி வருகிறோம். அவ்வப்போது இது தொடர்பான அதிகாரிகளையும் நாங்கள் சந்தித்து வருகிறோம். டிக்கெட்டானது எப்படி வெளிவந்தது. யார் இதை பிளாக்கில் விற்கிறார்கள் என்பதை கூடிய விரைவில் கண்டுபிடிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: AFG VS NED: ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி!