புனே: ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடரின் 30வது லீக் ஆட்டம் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின.
-
2️⃣4️⃣2️⃣ to WIN!#AfghanAtalan have done well with the ball in hand as they have restricted Sri Lanka to 241/10.
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
4️⃣ wickets for @fazalfarooqi10
2️⃣ wickets for @Mujeeb_R88
1️⃣ wicket for @RashidKhan_19 & @AzmatOmarzay each
Over to our batters now...!#CWC23 | #AFGvSL pic.twitter.com/KNu4rArlOg
">2️⃣4️⃣2️⃣ to WIN!#AfghanAtalan have done well with the ball in hand as they have restricted Sri Lanka to 241/10.
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 30, 2023
4️⃣ wickets for @fazalfarooqi10
2️⃣ wickets for @Mujeeb_R88
1️⃣ wicket for @RashidKhan_19 & @AzmatOmarzay each
Over to our batters now...!#CWC23 | #AFGvSL pic.twitter.com/KNu4rArlOg2️⃣4️⃣2️⃣ to WIN!#AfghanAtalan have done well with the ball in hand as they have restricted Sri Lanka to 241/10.
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 30, 2023
4️⃣ wickets for @fazalfarooqi10
2️⃣ wickets for @Mujeeb_R88
1️⃣ wicket for @RashidKhan_19 & @AzmatOmarzay each
Over to our batters now...!#CWC23 | #AFGvSL pic.twitter.com/KNu4rArlOg
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணாரத்ன களம் இறங்கினர். நல்ல தொடக்கத்தைக் கொடுக்க முடியாத இந்திய ஜோடி 22 ரன்கள் எடுத்த போது பிரிந்தது. திமுத் கருணாரத்ன 15 ரன்களில் வெளியேறினார்.
அதன்பின் பதும் நிசங்கா - குசல் மண்டீஸ் கூட்டணி சிறிது நேரம் நீடித்து நிதானமான முறையில் அணிக்கு ரன்களை சேர்த்தது. அரைசதத்தை நெருங்கிய பதும் நிசங்கா 46 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தது.
குசல் மண்டீஸ் 39, சதீர சமரவிக்ரம 36, சரித் அசலங்கா 22, தனஞ்சய டி சில்வா 14, ஏஞ்சலோ மேத்யூஸ் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 49.3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஃபசல்ஹக் பாரூக்கி 4 விக்கெட்களும், முஜிப் உர் ரகுமான் 2 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனைத் தொடர்ந்து, 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ஆப்கானிஸ்தான் அணி. தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளிக்க முடியவில்லை. 4 பந்துகளை எதிர்கொண்ட குர்பாஸ் எவ்வித ரன்களும், எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அதன் பின் ரஹ்மத் ஷா மற்றும் இப்ராஹிம் சத்ரான் ரன்கள் சேர்க்க, ஒரு கட்டத்தில் இவர்களது கூட்டணியும் பிரிந்தது. சத்ரான் 39 ரன்களுடனும், ரஹ்மத் ஷா 62 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து சேர்ந்த ஹஷ்மத்துல்லா ஷாஹிதி - அஸ்மத்துல்லா உமர்சாய் கூட்டணி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது.
இருவரும் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடினர். 45.2 ஓவர்கள் முடிவில் அந்த அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஷாஹிதி 58 ரன்களுடனும், உமர்சாய் 73 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் அந்த அணி தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: 37வது தேசிய விளையாட்டு போட்டி : தடகளத்தில் தமிழக வீரர் தங்கம் வென்று சாதனை! வாள்வீச்சில் பவானி தேவி தங்கம்!