மும்பை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
-
ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் விளாசி விராட் கோலி சாதனை! #etvbharat #etvbharattamil @imVkohli #cwc2023 #WorldCup2023 #worldcupcricket2023 #virat #ViratKohli𓃵 #ViratKohlicentury pic.twitter.com/9SG2e6mEgQ
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் விளாசி விராட் கோலி சாதனை! #etvbharat #etvbharattamil @imVkohli #cwc2023 #WorldCup2023 #worldcupcricket2023 #virat #ViratKohli𓃵 #ViratKohlicentury pic.twitter.com/9SG2e6mEgQ
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 15, 2023ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் விளாசி விராட் கோலி சாதனை! #etvbharat #etvbharattamil @imVkohli #cwc2023 #WorldCup2023 #worldcupcricket2023 #virat #ViratKohli𓃵 #ViratKohlicentury pic.twitter.com/9SG2e6mEgQ
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 15, 2023
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2019ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கண்ட தோல்விக்கு நியூசிலாந்து அணியை பழிதீர்க்க இந்திய வீரர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் இன்னிங்சை ரோகித் சர்மா மற்ற்ம் சுப்மான் கில் தொடங்கினர். ஆரம்பமே அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா தனது பங்கிற்கு 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி குழுமியிருந்த ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். அபாரமாக விளையாடிய சுப்மன் கில் 79 ரன்கள் குவித்து இருந்த போது கால் பிடிப்பு பிரச்சினை காரணமாக ரிட்டயர்ட் ஹார்ட் கொடுத்து ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலியுடன் கூட்டணி அமைத்தார். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை விளாசி தள்ளியது. அடித்து ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் கடந்தார். மறுமுனையில் தனது ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது 50வது சதத்தை பூர்த்தி செய்தார்.
50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய ஜாம்பவான் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்து புது உலக சாதனை படைத்தார். 291 ஆட்டம் 279 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள விராட் கோலி, 72 அரைசதம் 50 சதம் என அடித்து ஏறத்தாழ 13 ஆயிரத்து 800 ரன்களை குவித்து சாதனை படைத்து உள்ளார்.
இதையும் படிங்க : லீக் சுற்றில் புலி... நாக் அவுட் சுற்றில் தலைகீழ் நிலை..! இந்திய வீரர்களின் மோசமான சாதனை!