ETV Bharat / sports

4 OVER MAIDEN: டி20-இல் வரலாற்றில் முதன்முறையாக... சாதனை படைத்த விதர்பா அணியின் ஸ்பின்னர்

author img

By

Published : Nov 9, 2021, 10:30 PM IST

சையத் முஸ்தாக் அலி கோப்பைத் தொடரில் விதர்பா அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்ஷய் கர்னேவார், மணிப்பூருக்கு எதிரானப் போட்டியில் நான்கு ஓவர்களை ஒரு ரன்னைக் கூட கொடுக்காமல், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல் என்பது குறிப்பிடத்தக்கது.

Vidarbha spinner Akshay Karnewar, Akshay Karnewar, அக்ஷய் கர்னேவார், 4 OVER MAIDEN
4 OVER MAIDEN

விஜயவாடா: இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சையத் முஸ்தாக் அலி கோப்பை 2021-22 நவ. 4ஆம் தேதி தொடங்கியது. நாட்டின் பல இடங்களில் நடைபெறும் தொடர்களில் ஐந்து எலைட் பிரிவுகளின் கீழ், தலா ஆறு அணிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பிளேட் குரூப் எனப்படும் பிரிவில் எட்டு அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், பிளேட் குரூப்பில் இடம்பெற்றுள்ள விதர்பா - மணிப்பூர் அணிகள் நேற்று (நவ. 8) விஜயவாடாவில் உள்ள ஏசிஏ மைதானத்தில் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற விதர்பா அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்களில் 222 ரன்களைக் குவித்தது.

கர்னேவார்: 4-4-0-2

ஜித்தேஷ் சர்மா 71 (31), அபூர்வ் வான்கடே 49 (16) ரன்களைக் குவித்தனர். இதையடுத்து, விளையாடிய மணிப்பூர் அணி 16.3 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக, விதர்பா அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாக்-அவுட் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.

இப்போட்டியில், விதர்பா அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்ஷய் கர்னேவார் 4 ஓவர்களை வீசி ஒரு ரன்னைக் கூட கொடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இடது கை ஆஃப் ஸ்பின்னரான கர்னேவார், டி20 வரலாற்றில் வீசிய நான்கு ஓவர்களையும் மெய்டனாக்கிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: T20 WORLDCUP: ஐபிஎல் தொடரால் தப்பித்தேன் - வில்லியம்சன் வெளிப்படை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.