ETV Bharat / sports

உலகக் கோப்பை தொடரில் அக்சர் படேல் இடம் பெறாதது துரதிர்ஷ்டவசமானது - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சந்தீப் பாட்டீல் - சந்தீப் பாட்டீல் கருத்து

உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக அக்சர் படேல் விலகியது துரதிர்ஷ்டவசமானது என முன்னள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

cricket-world-cup-sandeep-patil-feels-sorry-for-axar-patel-welcomes-ashwin-inclusion
உலக கோப்பை தொடரில் அக்சர் படேல் இடம் பெறாதது துரதிர்ஷ்டவசமானது..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 8:15 AM IST

சென்னை: 13வது ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (அக்.5) தொடங்கி, நவம்பர் 19ஆம் தேதி வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் அக்சர் படேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது. காயம் காரணமாக அக்சர் படேல் விலகியதையடுத்து, தமிழக வீரரான அஸ்வினுக்கு இடம் கிடைத்துள்ளது. இதன் மூலம் சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை அக்சர் படேல் இழந்துள்ளார் என முன்னாள் இந்திய வீரரான சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் ஈஸ்ட் பெங்கால் கிளப் கிரிக்கெட் அணியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் இந்திய வீரரான சந்தீப் பாட்டீல் இது குறித்து கூறுகையில், “கடைசி நேரத்தில் அக்சர் வெளியேறியது துரதிர்ஷ்டவசமானது. இதனால் தன்னுடைய சொந்த மண்ணில் உலகக் கோப்பை விளையாடும் வாய்ப்பை அக்சர் படேல் இழந்துள்ளார். இருப்பினும், உலகக் கோப்பை ஆரம்ப அணியில் அஸ்வின் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என தெரியவில்லை. இந்திய அணிக்கு அஸ்வின் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை.

என்னுடைய கணிப்பின்படி, உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி மற்றும் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று நினைக்கிறேன். 2023 ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேம் சேஞ்சராக ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருப்பார்கள். இந்திய அணியின் பிளேயிங் லெவன் யார் என்பதை தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா முடிவு செய்வார்கள்" என தெரிவித்தார்.

1983இல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வீரராக இருந்த சந்தீப் பாட்டீல் பெங்களூருவைத் தளமாகக் கொண்ட தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) பயிற்சியாளர், தேர்வாளர் மற்றும் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2023 Cricket World Cup: உலக கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.