ETV Bharat / sports

ஆசியக்கோப்பைத்தொடர்.. 100ஆவது சர்வதேச டி20 தொடரில் ஆடவுள்ள விராட் கோலி... - ரஷீத் கான் ஆப்கானிஸ்தான்

20 ஓவர் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடவுள்ள விராட் கோலி தனது 100ஆவது சர்வதேச டி20 தொடரில் விளையாட உள்ளார்.

ஆசிய கோப்பை தொடர்.. 100வது சர்வதேச டி20 தொடரில் ஆடவுள்ள விராட் கோலி..

author img

By

Published : Aug 25, 2022, 3:01 PM IST

துபாய்: 20 ஓவர் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன.

இதில் முதல் போட்டியில் ‘பி' பிரிவில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, வரும் 28ஆம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவுள்ள ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஐந்து முன்னணி வீரர்கள் விளையாடவுள்ளனர்.

பாபர் அஸாம் (பாகிஸ்தான் வீரர்): முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அஃப்ரிடி காயம் அடைந்துள்ளதால், பாகிஸ்தான் அஸாமின் அட்டகாசமான பேட்டிங்கையே பெரிதும் நம்பியுள்ளது. 27 வயதான அஸாம், டி20 மற்றும் ஒரு நாள் பேட்டிங் தரவரிசையில் முன்னணியில் உள்ளார்.

2021 டி20 உலகக்கோப்பையில் கடைசிப்போட்டியில், இவர் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்தார்.

விராட் கோலி (இந்திய வீரர்): சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது 100ஆவது டி20 சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.

20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்

இவர் கடைசியாக நவம்பர் 2019ஆம் ஆண்டில் தனது சர்வதேச சதத்தை அடித்தார். 2011ஆம் ஆண்டில் அறிமுகமானதில் இருந்து 102 டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களை அடித்துள்ள கோலி, ஒரு ஆண்டாகப் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வந்தார்.

வனிந்து ஹசரங்கா (இலங்கை வீரர்): இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில், தனது லெக் ஸ்பின் மூலம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தினார். 16 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு சிறந்த பந்து வீச்சாளராக தன்னை நிரூபித்தார்.

சக சுழற்பந்து வீச்சாளர்களான மகேஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வான்டர்சே மற்றும் பிரவீன் ஜெயவிக்ரமா ஆகியோருடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுழலுக்கு ஏற்ற மெதுவான பிட்ச்களில் இலங்கையின் பந்துவீச்சை வழிநடத்த உள்ளார்.

சாகிப் அல் ஹசன் (பங்களாதேஷ் வீரர்): தற்போதைய பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் தொடர் டி20 போட்டிகளின் கேப்டன் சாகிப் அல் ஹசன், அடிக்கடி களத்தின் உள்ளேயும் களத்தின் வெளியேயும் சர்ச்சைகளை சந்தித்தார். இடது கை பேட்ஸ்மேனான ஹசன் மற்றும் சுழற்பந்து வீச்சாளரான ஹசன், தனது நூறாவது டி20 சர்வதேச போட்டியில் விளையாட உள்ளார்.

ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான் வீரர்): மொத்தமாக 66 டி20 போட்டிகளில் 112 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் மற்றும் தி ஹன்ட்ரட் உள்ளிட்ட உலகளாவிய 20-20 லீக் போட்டிகளில் தனது விக்கெட் எடுக்கும் நுட்பமான லோயர்-ஆர்டர் பேட்டிங் மூலம் அணிக்கு வலுசேர்க்க உள்ளார்.

இதையும் படிங்க: ஆசிய கோப்பையிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.