ETV Bharat / sports

பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைப்பதில் தாமதம்! - இந்தியா வரும் வெளிநாட்டு அணி

Pakistans India visa delayed: உலக கோப்பை போட்டிக்காக பாக்கிஸ்தான் அணி இந்தியா வரும் விசா தாமதம் அடைவதால் அந்த அணியின் பிற போட்டிகள் தாமதமாவதாக கூறப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 11:00 PM IST

ஹைதரபாத்: பாகிஸ்தான் அணி உலகக் போப்பை போட்டிகளுக்கு முன்பாக, நட்பு ரீதியான போட்டிகளுக்காக ஐக்கிய அரபு நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தது. ஆனால், இந்தியா வருவதற்கான விசா கிடைக்கப்படாத காரணத்தினால் பாகிஸ்தான் அணியின் பயணம் தாமதமாகி உள்ளது.

முன்னதாக, இந்தியாவின் ஹைதாரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடக்கவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டி, ஐக்கிய அமீரகம் உடனான நட்பு ரீதியான விளையாட்டிற்குப் பிறகு, தூபாயில் இருந்து இந்தியா வர திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது பாகிஸ்தான் அணி துபாய்க்குச் செல்லாமல், லாகூரில் இருந்து இந்தியா வர இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்தியா வரும் வெளிநாட்டு அணிகளுள், விசா கிடைக்காமல் இருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மட்டும்தான் என கூறப்படுகிறது. இந்த நிலை இரு நாடுகளுக்கு மத்தியில் நிலவும் அரசியல் சூழலை நினைவூட்டுவதாக கூறப்படுகின்றன.

மேலும், தற்போது உள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடந்த 11 ஆண்டுகளில், 2012ஆம் ஆண்டு ஒரே ஒரு முறைதான் ஒருநாள் தொடரை விளையாடியுள்ளனர். இதுவரை இந்தியா அணி, பாகிஸ்தான் சென்று விளையாடாத நிலையில், இந்த ஆண்டிற்கான ஆசியக் கோப்பை விளையாட்டுப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதாக திட்டம் இருந்தது.

அதன் பின்னர் பிசிசிஐ-இன் வற்புறுத்தலுக்குப் பிறகுதான், 2023 ஆசியக் கோப்பைக்கான போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகள் இணைந்து நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு அக்டோபரில் துவங்கும் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடக்க உள்ளது. சில விழா நாட்களில் நடக்க திட்டமிட்ட போட்டிகளின் அட்டவணை, அதிகாரிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றன.

பாகிஸ்தான் அணியில் தற்போது உள்ள வீரர்களுள் முகமது நவாஸ் மற்றும் அகா சல்மான் ஆகியோர் மட்டுமே இந்தியாவிற்கு வந்துள்ளனர். முகமது நவாஸ், 2016ஆம் ஆண்டு ஆசிய டி20 போட்டிகளுக்காக வந்துள்ளார். மேலும், அகா சல்மான் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்திற்காக ஒரு முறை இந்தியா வந்துள்ளார்.

மேலும், 1992ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்திய உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தான் அணியின் பிரபல வீரர் இம்ரான் கான் தலைமையிலான அணி, இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐசிசி உலகக் கோப்பை 2023 பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.