கொழும்பு: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இன்றைய போட்டியானது இவ்வளவு எளிதாக அமையும் என கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் கனவில் கூட நினத்திருக்க மாட்டார்கள்.
-
Siraj dedicated the cash prize from the Player of the match award to all the ground staffs. pic.twitter.com/pgD1rpncQN
— Johns. (@CricCrazyJohns) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Siraj dedicated the cash prize from the Player of the match award to all the ground staffs. pic.twitter.com/pgD1rpncQN
— Johns. (@CricCrazyJohns) September 17, 2023Siraj dedicated the cash prize from the Player of the match award to all the ground staffs. pic.twitter.com/pgD1rpncQN
— Johns. (@CricCrazyJohns) September 17, 2023
முதலில் பந்து வீசிய இந்திய அணி, இலங்கையை 50 ரன்களில் சுருட்டியது. இதற்கு முக்கிய காரணம் முகமது சிராஜ். அவரது அபாரமான பந்து வீச்சால் எதிர் அணியை உருக்குலையச் செய்தார். அவர் இலங்கை அணிக்கு எதிராக 7 ஓவர்கள் வீசி, 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
-
The GOAT spell.
— Johns. (@CricCrazyJohns) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
- 4 wickets by Siraj in a single over. pic.twitter.com/vSO10rCceL
">The GOAT spell.
— Johns. (@CricCrazyJohns) September 17, 2023
- 4 wickets by Siraj in a single over. pic.twitter.com/vSO10rCceLThe GOAT spell.
— Johns. (@CricCrazyJohns) September 17, 2023
- 4 wickets by Siraj in a single over. pic.twitter.com/vSO10rCceL
இதற்காக சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதில் அவருக்கு கிடைத்த 5,000 அமெரிக்க டாலரை இலங்கை மைதான ஊழியர்களுக்கு வழங்க இருப்பதாக அறிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “இந்த பரிசு மைதான ஊழியர்களுக்கானது. ஏனென்றால், அவர்கள் தங்களது பணியை சரியாக செய்யவில்லை என்றால், இந்த தொடரை வெற்றிகரமாக நடத்தி இருக்க முடியாது.
நான் கடந்த சில நாட்களாக சிறப்பாக பந்து வீசி வருகிறேன். கடந்த சில போட்டிகளில் எனது பந்து வீச்சில் பேட்டில் பந்து படாமல் விக்கெட் ஏதும் கிடைக்காமல் போனது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் எட்ஜ் ஆனார்கள். இதன் மூலம் விக்கெட்டுகள் கிடைத்தது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையே ஒரு நல்ல நட்புறவு இருந்தது. அது அணிக்கு மிகவும் உதவியாக இருந்தது” என்றார்.
முன்னதாக, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா, கண்டி மற்றும் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு 50,000 அமெரிக்க டாலரை ரொக்கப் பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இதையும் படிங்க: Mohammed Siraj: ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள்.. வரலாற்று சாதனை படைந்த முகமது சிராஜ்!