ETV Bharat / sports

IND vs SL: கோலிக்கு 100ஆவது, ரோஹித்துக்கு முதலாவது டெஸ்ட்

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

kohlis-100th-test-india-win-toss-elect-to-bat-against-sl

author img

By

Published : Mar 4, 2022, 10:10 AM IST

மொகாலி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்த மூன்று டி20 போட்டிகளிலும் இந்தியா 3-0 என கணக்கில் அபார வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று(மார்ச்.4) முதல் டெஸ்ட் தொடர் போட்டி தொடங்கியது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100ஆவது டெஸ்ட் போட்டி என்பதால், அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 100ஆவது டெஸ்டில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர். போட்டிக்கு முன்னதாக, சுனில் கவாஸ்கர், சச்சின், ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த டெஸ்ட் போட்டி மற்றொரு சிறப்பையும் பெற்றுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கும் முதல் டெஸ்ட் போட்டி இது. இதனால் அவர் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இப்படி இன்னாள், முன்னாள் கேப்டன்களின் ஆட்டத்தை பார்க்க இந்திய கிரிக்கெட்ட ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

அணி வீரர்களின் பட்டியல்

இந்தியா:

ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், சுப்மான் கில், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கோனா பாரத் (விக்கெட் கீப்பர்), உமேஷ் யாதவ், சவுரப் குமார், பிரியங்க் பஞ்சால்.

இலங்கை:

திமுத் கருணாரத்னே (கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, லசித் எம்புல்தெனியா, தனஜய டி சில்வா, சரித் அசலங்கா, துஷ்மந்த சம்மீரா, தினேஷ் சண்டிமால், விஷ்வ பெர்னாண்டோ, சுரங்க லக்மல், லஹிரு திரிமான்னே, லஹிரு பட்ஹூம், லஹிரு பட்ஹூம், ன்சங்க, ஜெஃப்ரி வான்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரம, சாமிக்க கருணாரத்ன.

இதையும் படிங்க: விராட் கோலியின் 100-ஆவது டெஸ்ட் -இந்தியா – இலங்கை முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.