துபாய்: ஐசிசி ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
2021 மார்ச் 20ஆம் தேதி நிலவரப்படி, டி20 தரவரிசையில் முதல் முதல் எட்டு இடங்களை பிடித்த அணி நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதிப்பெற்றுள்ளது. சுப்பர் 12 சுற்றின் குரூப்-1 பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளும், குரூப்-2 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகளும் இடம்பெறுள்ளன.
தகுதிபெறாத அணிகள்
எஞ்சியுள்ள நான்கு இடங்களுக்கு எட்டு அணிகள் போட்டியிடுகின்றன. இந்த எட்டு அணிகள் 'ஏ', 'பி' என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், ஏ பிரிவு தகுதி சுற்று அணிகளில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் உள்ளன. 'பி' பிரிவில் வங்கதேசம், ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகள் உள்ளன.
இதில் 'ஏ' பிரிவில் முதலிடம் பெறும் அணியும், 'பி' பிரிவில் இரண்டாம் இடம் பெறும் அணியும் சூப்பர்-12 பிரிவின் குரூப்-1இல் இடம்பெறும். 'பி' பிரிவில் முதலிடம் பெறும் அணியும், ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியும் குரூப்-2இல் இடம்பெறும்.
நான் எதிர்பார்த்ததுதான்
இச்சூழலில் அனைத்து அணிகளும் தங்களது உலகக்கோப்பை அணியை அறிவித்துவிட்டது. அதேபோல், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி இந்தியாவின் டி20 உலகக்கோப்பை அணியை அறிவித்தது. மேலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை டி20 உலகக்கோப்பை அணியின் ஆலோசகராக பிசிசிஐ அறிவித்தது.
இந்திய அணியில் பல முன்னணி வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை என சலசலப்பு எழுந்தது. குறிப்பாக, இடது கை பந்துவீச்சாளர் நடராஜன் தேர்வு செய்யப்படாதது பெரும் விவாதத்தை எழுப்பியது.
இதுகுறித்து, நடராஜன் தெரிவிக்கையில், " நான் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறாதது எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தவில்லை. குறுகிய காலத்தில், உலக்கோப்பை அணியில் இடம்பிடிப்பது என்பது சாத்தியமில்லாதது. பலரும், நான் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்தனர். ஆனாலும், நான் அணியில் இடம்பிடிக்க மாட்டேன் என்பது எனக்கு தெரியும்" என்றார்.
தற்போது, ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் உள்ளார். இந்நிலையில், அவருக்கு இன்று (செப். 22) கரோனா தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IPL 2021: நடராஜனுக்கு கரோனா; நடக்குமா இன்றையப் போட்டி?