ETV Bharat / sports

அறிமுக போட்டியிலேயே கவனம் ஈர்த்த குட்டி மலிங்கா! சி.எஸ்.கேவின் வருங்கால நட்சத்திரமா ? தோனி கணிப்பு - dhoni

குட்டி மலிங்கா என அழைக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த புதிய வேகப்பந்து புயல் மதீஷா பதிரனா , தனது அறிமுக ஐபிஎல் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

matheesha
matheesha
author img

By

Published : May 15, 2022, 10:49 PM IST

15வது ஐபிஎல் தொடரில் இன்று (மே 15) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்ன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. போட்டியின் முடிவு சென்னை அணிக்கு சாதகமாக அமையாவிட்டாலும் , சில வீரர்களின் செயல்பாடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடரில் இருந்து காயம் காரணமாக ஆடம் மில்னே விலகிய நிலையில் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட மதீஷா பதிரனா இன்று குஜராத் டைடன்ஸுக்கு எதிராக களமிறங்கினார். 19 வயதே ஆன மதீஷா பதிரனா தனது முதல் பந்திலேயே தொடக்க வீரர் சுபமன் கில்லை எல்பிடள்யூ ஆக்கி அசத்தினார்.

அதனைத்தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவையும் அவுட் செய்தார். 19 பந்துகள் வீசிய பதிரனா 24 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பதிரனா
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பதிரனா

போட்டிக்குப் பிறகு பேசிய சி.எஸ்.கே கேப்டன் தோனி மலிங்கா ஸ்டைலில் பந்துவீசும் பதிரனா டெத் ஓவர்களில் அற்புதமாக பந்து வீசக்கூடியவர் என்றும்; ஸ்லோவாக பந்து வீசக்கூடிய திறமை அவரிடம் உள்ளது என்றும் பாராட்டினார். ஒரு போட்டியிலேயே ’தல’ தோனியை பதிரனா கவர்ந்து விட்டார்,நிச்சயம் இவர் தான் அணியின் எதிர்காலம் என சென்னை ரசிகர்கள் தற்போதே மெச்சுகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.