சார்ஜா: ஐபிஎல் தொடரில் 41ஆவது லீக் ஆட்டத்தில் இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இன்று மோதியது. இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மித் 39 ரன்களை எடுத்தார். பந்துவீச்சு தரப்பில் பெர்குசன், நரைன், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
திணறிய தொடக்கம்
இதையடுத்து, 128 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வெங்கடேஷ் ஐயர் 14, திரிபாதி 9, சுப்மன் கில் 30, இயான் மார்கன் 0 என ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
-
2⃣ quick strikes from @DelhiCapitals! 👍 👍@KagisoRabada25 dismisses Gill while @ashwinravi99 gets Eoin Morgan out. 👌 👌#KKR 4 down. #VIVOIPL #KKRvDC
— IndianPremierLeague (@IPL) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Follow the match 👉 https://t.co/TVHaNszqnd pic.twitter.com/s2zjDgF7CR
">2⃣ quick strikes from @DelhiCapitals! 👍 👍@KagisoRabada25 dismisses Gill while @ashwinravi99 gets Eoin Morgan out. 👌 👌#KKR 4 down. #VIVOIPL #KKRvDC
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
Follow the match 👉 https://t.co/TVHaNszqnd pic.twitter.com/s2zjDgF7CR2⃣ quick strikes from @DelhiCapitals! 👍 👍@KagisoRabada25 dismisses Gill while @ashwinravi99 gets Eoin Morgan out. 👌 👌#KKR 4 down. #VIVOIPL #KKRvDC
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
Follow the match 👉 https://t.co/TVHaNszqnd pic.twitter.com/s2zjDgF7CR
இதனையடுத்து இறங்கிய, தினேஷ் கார்த்திக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், சுனில் நரைன் 10 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 21 ரன்களை விரைவாக எடுத்து அவுட்டானார். ஒருமுனையில் பொறுப்பாக ஆடிய நிதீஷ் ராணா கொல்கத்தா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார்.
நாயகன் நரைன்
இதன்மூலம், கொல்கத்தா அணி, 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்து, தொடரில் தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம், கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
-
Another one for Avesh Khan! 👏 👏#KKR 5 down as Dinesh Karthik gets out. #VIVOIPL #KKRvDC @DelhiCapitals
— IndianPremierLeague (@IPL) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Follow the match 👉 https://t.co/TVHaNszqnd pic.twitter.com/MdHqss07MU
">Another one for Avesh Khan! 👏 👏#KKR 5 down as Dinesh Karthik gets out. #VIVOIPL #KKRvDC @DelhiCapitals
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
Follow the match 👉 https://t.co/TVHaNszqnd pic.twitter.com/MdHqss07MUAnother one for Avesh Khan! 👏 👏#KKR 5 down as Dinesh Karthik gets out. #VIVOIPL #KKRvDC @DelhiCapitals
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
Follow the match 👉 https://t.co/TVHaNszqnd pic.twitter.com/MdHqss07MU
பேட்டிங்கில் விரைவாக 21 ரன்களையும், பந்துவீச்சில் 2 விக்கெட்டையும் வீழ்த்திய சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க: IPL 2021: மும்பை பந்துவீச்சு; இஷான் கிஷன் நீக்கம்