ETV Bharat / sports

SRH Vs PBKS : ஐதராபாத்தின் வெற்றிக் கதவை திறந்த திரிபாதி! பஞ்சாப்புக்கு முதல் சறுக்கல்! - ஐபிஎல் 2023

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

SRH Vs PBKS
SRH Vs PBKS
author img

By

Published : Apr 10, 2023, 6:54 AM IST

Updated : Apr 10, 2023, 7:32 AM IST

ஐதராபாத் : 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்த 14வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதரபாத் அணியின் கேப்டன் எய்டென் மார்க்ரம் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

பஞ்சாப் அணிக்கு தொடக்கம் முதலே வேதனை தரும் சூழலாக அமைந்தது. அந்த அணி ரன் கணக்கை துவங்கும் முன்னரே விக்கெட் கணக்கை தொடங்கியது. புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் பஞ்சாப் தொடக்க வீரர் பிரபிசிம்ரான் ரன் ஏதுவுமின்றி எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார்.

மறுபுறம் விக்கெட் வீழ்ச்சி நடந்து கொண்டு இருந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பஞ்சாப் கேப்டன் தவான் நங்கூரம் போல் நிலைத்து நின்று எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு குடைச்சல் கொடுத்து வந்தார். அவருக்கு உறுதுணையாக சாம் கரண் (22 ரன்) மட்டும் நிலைத்து ஆடினார்.

மற்றபடி மேத்யூ ஷார்ட் 1 ரன், ஜித்தேஷ் 4 ரன், சிக்கந்தர் ராசா 5 ரன், ஷாருக்கான் 4 ரன், ஹர்தீப் பரார் 1 ரன் என சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய தவான் 1 ரன்னில் தனது சதத்தை கோட்டவிட்டார். முதல் இன்னிங்சின் கடைசி பந்தில் சிக்சர் அடித்த தவான் 99 ரன்கள் மட்டும் சேர்த்து ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 3வது சதத்தை நூலிழையில் கோட்டை விட்டார்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 143 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டுகளும் மார்கோ ஜென்சன், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 144 ரன்கள் இலக்கை நோக்கி சன்ரைசஸ் ஐதராபாத் அணி விளையாடியது.

ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்கள் ஹேரி புரூக் (13 ரன்) மயங்க் அகர்வால் (21 ரன்) நிதான ஆட்டத்தின் மூலம் அணிக்கு ஓரளவு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அடுத்து வந்த ராகுல் திரிபாதி மற்றும் ஏய்டென் மார்க்ராம் அசூர ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றிக் கனியை பறிக்க போராடினர்.

ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பிய ராகுல் திரிபாதி, 17வது ஓவரில் அணியின் வெற்றியை உறுதி செய்தார். சன்ரைசஸ் ஐதராபாத் அணி 17 புள்ளி 1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் ஐதராபாத் அணி தனது முதல் வெற்றியை பெற்றது.

ராகுல் திரிபாதி 10 பவுண்டரி 3 சிக்சர் விளாசி 74 ரன்களும், கேப்டன் ஏய்டன் மார்க்ராம் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்னும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஐதராபாத் அணி 7 வது இடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க : GT vs KKR: ரிங்கு சிங் அதிரடி...சரவெடி... கடைசி ஓவரில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி!

Last Updated : Apr 10, 2023, 7:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.