துபாய்: 17வது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே ஒவ்வொரு அணி வீரர்களை தக்கவைத்துக் கொள்வதும், விடுவிப்பதும் மற்றும் வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்வது என்ற டிரேட் முறை சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.
குறிப்பாக, இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கடந்த 2 சீசன்களாக வழிநடத்தி வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கும், மும்பை அணியில் இருந்த கேமரூன் கிரீன் பெங்களூரு அணிக்கும் தாவிக் கொண்டனர் என்பது குறிபிடத்தக்க அம்சமாகும். இதனைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியாவுக்கு மும்பை அணி நிர்வாகம் கேப்டன் பதவியைக் கொடுத்தது.
-
The Message is clear. 😉
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
From the vault ft. Sameer Rizv7 pic.twitter.com/FqxEPStx02
">The Message is clear. 😉
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023
From the vault ft. Sameer Rizv7 pic.twitter.com/FqxEPStx02The Message is clear. 😉
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023
From the vault ft. Sameer Rizv7 pic.twitter.com/FqxEPStx02
இந்த நிலையில், இன்று (டிச.19) துபாயில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் 2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி, இந்த ஏலம் மதியம் 1 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச கிரிக்கெட் வீரரான சமீர் ரிஸ்வியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு வாங்கி உள்ளது.
20 லட்சத்தில் தொடங்கிய ஏலத்தில், சமீர் ரிஸ்வியை கைப்பற்ற டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8.40 கோடிக்கு வாங்கியது.
சமீர் ரிஸ்வி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தின் TNPL போன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் டி20 லீக் நடைபெற்று வருகிறது. அதில், கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதிரடியாக விளையாடக்கூடிய இவர், 9 இன்னிங்ஸில் 455 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும், இவர் 11 முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.
முன்னதாக, இன்று (டிச.19) நடைபெற்று வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நியூசிலாந்து வீரர்களான டேரில் மிட்செல்லை 14 கோடிக்கும், இடது கை பேட்டரான ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடிக்கும் வாங்கியுள்ளது. அதேபோல், ஷர்துல் தாக்கூரை 4 கோடிக்கு வாங்கியுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.
மேலும், கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானை, குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. ஆரம்ப விலையாக 40 லட்சத்தில் ஏலம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IPL Auction 2024 : அதிக விலைக்கு போன் டாப் 5 வீரர்கள்! இந்திய வீரர்களுக்கு வந்த சோகம்!