துபாய்: இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே ஒவ்வொரு அணியிலும் வீரர்களை தக்கவைத்து கொள்வதும், விடுவிப்பதுமான டிரேட் முறை நடந்தது.
-
From Umran's territory to Umran's home 🧡
— SunRisers Hyderabad (@SunRisers) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Our #Riser Jaydev has a special message for Hyderabad 🙌#HereWeGOrange pic.twitter.com/fKzvbQZDXH
">From Umran's territory to Umran's home 🧡
— SunRisers Hyderabad (@SunRisers) December 19, 2023
Our #Riser Jaydev has a special message for Hyderabad 🙌#HereWeGOrange pic.twitter.com/fKzvbQZDXHFrom Umran's territory to Umran's home 🧡
— SunRisers Hyderabad (@SunRisers) December 19, 2023
Our #Riser Jaydev has a special message for Hyderabad 🙌#HereWeGOrange pic.twitter.com/fKzvbQZDXH
இதில் சில முக்கிய வீரர்களான ஹர்திக் பாண்டியா, கேமரூன் கிரீன் ஆகியோர் மாற்றிக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள பிரபல வனிக வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், இந்திய மற்றும் சவுராஷ்டிரா வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனட்கட்டை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1.60 கோடிக்கு வாங்கி உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெய்தேவ் உனட்கட் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்; "சன் ரைசர்ஸ் அணியில் ஒரு பகுதியாக இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த ஏலம் நன்றாக அமைந்துள்ளது. இது எனது வாழ்க்கையில் ஒரு புதிய கட்டம். நாங்கள் வர இருக்கும் சீசனில் கோப்பையை வெல்வோம் என நம்புகிறேன்" என்றார்.
-
Hyderabad ki JAY 🙏#HereWeGOrange pic.twitter.com/gctg82CpuS
— SunRisers Hyderabad (@SunRisers) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hyderabad ki JAY 🙏#HereWeGOrange pic.twitter.com/gctg82CpuS
— SunRisers Hyderabad (@SunRisers) December 19, 2023Hyderabad ki JAY 🙏#HereWeGOrange pic.twitter.com/gctg82CpuS
— SunRisers Hyderabad (@SunRisers) December 19, 2023
32 வயதான இவர், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளில் விளையாடி உள்ளார்.
ஜெய்தேவ் உனட்கட் 94 போட்டிகளில் 91 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 5/25 இவரது சிறந்த பந்து வீச்சாக உள்ளது. அதேபோல் இவர் இந்தியாவிற்காக 10 டி20 போட்டிகள் விளையாடி உள்ளார். அதில் 14 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
மேலும், இன்று (டிச.19) நடைபெற்று வரும் 2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை 20.50 கோடிக்கும், டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடிக்கும் வாங்கியுள்ளது. அதேபோல், வனிந்து ஹசரங்கவை 1.5 கோடிக்கும், இந்திய வீரர் ஆகாஷ் சிங்கை ஆரம்ப விலையான 20 லட்சத்திற்கும் வாங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: IPL Auction 2024: கவனம் ஈர்த்த தமிழக வீரர் ஷாருக்கான்! சர்வதேச வீரர்களுக்கே சவாலளித்து அதிரடி!