கொல்கத்தா: இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் அடுத்த ஆண்டு எப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இதற்கான மினி ஏலம் வரும் 19ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. ஏலப் பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 333 வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருப்பதாக கடந்த 11ஆம் தேதி ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது.
-
Quick Update 👇#IPL2024 @VenkyMysore @ShreyasIyer15 @NitishRana_27 pic.twitter.com/JRBJ5aEHRO
— KolkataKnightRiders (@KKRiders) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Quick Update 👇#IPL2024 @VenkyMysore @ShreyasIyer15 @NitishRana_27 pic.twitter.com/JRBJ5aEHRO
— KolkataKnightRiders (@KKRiders) December 14, 2023Quick Update 👇#IPL2024 @VenkyMysore @ShreyasIyer15 @NitishRana_27 pic.twitter.com/JRBJ5aEHRO
— KolkataKnightRiders (@KKRiders) December 14, 2023
இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயரை நியமித்துள்ளது அணி நிர்வாகம். அதே போல் நிதிஷ் ரானா அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2023 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை. இதனால் அந்த அணியை நிதிஷ் ரானா வழிநடத்தினார்.
இதற்கிடையில், ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்புவதால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் அவர் கேப்டனாக செயல்பட உள்ளார். இது குறித்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது; "கடந்த சீசனில் காயம் காரணமாக இல்லாதது உட்பட பல்வேறு சவால்களை எங்களுக்கு வழங்கியதாக நான் நம்புகிறேன்.
அதே போல் நிதிஷ் ரானா நான் இல்லாத இடத்தை நிரப்பியது மட்டுமல்லாமல் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு அவரை துணை கேப்டனாக நியமித்ததில் மகிழ்ச்சி. இது தலைமை குழுவை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் அறிக்கையில் கூறியதாவது; "கடந்த ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டது துருதிஷ்டவசமான ஒன்று. மீண்டும் அவர் அணிக்கு கேப்டனாக திரும்புவது மகிழ்ச்சி. காயத்தில் இருந்து திரும்புவதற்கு அவர் கடுமையாக உழைத்தார்" என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: அர்ஜூனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை - பிசிசிஐ தகவல்!