கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இன்று (அக்.3) நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஸ்டீவ் ஸ்மித் தலமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் ஆர்சிபி அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 72 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார்.
-
The MILESTONE man! 🤴🏻#PlayBold #IPL2020 #WeAreChallengers #Dream11IPL #RCBvRR pic.twitter.com/weNlyl4Erq
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The MILESTONE man! 🤴🏻#PlayBold #IPL2020 #WeAreChallengers #Dream11IPL #RCBvRR pic.twitter.com/weNlyl4Erq
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 3, 2020The MILESTONE man! 🤴🏻#PlayBold #IPL2020 #WeAreChallengers #Dream11IPL #RCBvRR pic.twitter.com/weNlyl4Erq
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 3, 2020
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 5,500 ரன்களையும் விராட் கோலி கடந்து, ஐபிஎல் வரலாற்றில் 5,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய உச்சத்தையும் விராட் கோலி எட்டியுள்ளார்.
இச்சாதனையை அவர் 181 போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: விராட், படிகல் அதிரடியில் ஆர்சிபி அபார வெற்றி!