ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விதமாக வீரர்கள் காயமடைந்து தொடரிலிருந்து விலகுவது தொடர் கதையாகி வருகிறது.
அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர் அலி கான், பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகினார்.
இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டிம் செஃபெர்ட் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்து முடிந்த கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர். மேலும் இந்த சீசனில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உள்ளூர் போட்டிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கங்குலி!