ETV Bharat / sports

ஐபிஎல் 2020 : டெல்லி அணிக்கு 164 ரன்கள் இலக்கு! - எஸ்ஆர்எச் vs டிசி நேரலை தகவல்கள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 163 ரன்களைக் குவித்தது.

SRH VS DC first innings match update
SRH VS DC first innings match update
author img

By

Published : Sep 29, 2020, 9:26 PM IST

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப்.29) நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசரஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோவ் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர், 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட் இழந்து அரை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மனீஷ் பாண்டேவும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன்

பின்னர் ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோவ் - வில்லியம்சன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த பேர்ஸ்டோவ், ஐபிஎல் தொடரில் தனது நான்காவது அரை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். பின்னர் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோவ்

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 53 ரன்களையும், வில்லியம்சன் 41 ரன்களையும் எடுத்தனர்.

இதையும் படிங்க: சூப்பர் ஓவரில் முதல் முறையாக தோல்வியைத் தழுவிய பும்ரா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.