ETV Bharat / sports

'அவர்கள் எப்போதும் நம் இதயத்தில் சூப்பர் கிங்ஸாக இருப்பார்கள்' - சாக்ஷி தோனி உணர்ச்சிகர பதிவு! - சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை அணி ஃபிளே ஆஃப் சுற்றிற்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்ததைத் தொடர்ந்து தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உண்மையான வீரர்கள்! எப்போதும் நம் இதயத்தில் சூப்பர் கிங்ஸாக இருப்பார்கள்- சாக்ஷி தோனி

author img

By

Published : Oct 26, 2020, 9:57 AM IST

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதிபெறும் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல்முறையாக இழந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த சென்னை அணி, இதுவரை 12 போட்டிகளில் விளையாடி வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் அணியின் கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ”இது ஒரு விளையாட்டு. நீங்கள் சிலவற்றை வென்றால் சிலவற்றை இழக்கிறீர்கள். பல வியக்கவைக்கும் வெற்றிகளுக்கும் சில வேதனையான தோல்விகளுக்கும் காலங்கள் சாட்சியாக இருக்கின்றன. சில வெற்றியின் மூலம் கொண்டாடுவதும், மற்றொன்றால் மனம் உடைந்து போவதும் இயல்பு. சிலர் வெற்றி பெறுகிறார்கள், சிலர் தோற்கிறார்கள், மற்றவர்கள் தவற விடுகிறார்கள். இது ஒரு விளையாட்டு. யாரும் தோற்க விரும்பில்லை, ஆனால் அனைவரும் வெற்றியாளர்களாக இருக்க முடியாது.

 சாக்ஷியின் இன்ஸ்டாகிராம் பதிவு
சாக்ஷியின் இன்ஸ்டாகிராம் பதிவு

உண்மையான வீரர்கள் போராடுவதற்கு பிறந்திருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் எப்போதும் நம் இதயத்திலும் நம் மனதிலும் சூப்பர் கிங்ஸாக இருப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.