ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் இன்று (செப்.30) நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு தொடக்கமே அதிர்சியளிக்கும் வகையில் சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், நிதீஷ் ராணா ஆகியோர் சொற்ப ரன்களில் களமிறங்கி வெளியேறினர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த சுப்மன் கில், ஸ்கோரை உயர்த்தினார்.
இப்போட்டியில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில், ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய இயன் மோர்கன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 47 ரன்களையும், இயன் மோர்கன் 34 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த இரண்டு போட்டிகளில் சிக்சர் மழை பொழிந்த ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறினர்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர், 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷிவம் மாவியிடன் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சாம் கர்ரன் 54 ரன்களை எடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. மேலும் இந்த சீசனில் ராஜஸ்தான் அணி சந்திக்கும் முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2020: கேகேஆரிடம் சுருண்ட ராஜஸ்தான்! - கேகேஆர் vs ஆர் ஆர் ஸ்கொர்
கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (செப். 30) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.