ETV Bharat / sports

ஐபிஎல் 2020: மீண்டும் ஊதா நிற தொப்பியை கைப்பற்றிய ரபாடா! - ஐபிஎல் 2020 செய்திகள்

13ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுலும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான ஊதா நிற தொப்பியை டெல்லி அணியின் ரபாடாவும் கைப்பற்றினர்.

IPL 13: Rabada reclaims Purple Cap, Rahul continues to hold Orange Cap
IPL 13: Rabada reclaims Purple Cap, Rahul continues to hold OraIPL 13: Rabada reclaims Purple Cap, Rahul continues to hold Orange Capnge Cap
author img

By

Published : Sep 30, 2020, 6:14 PM IST

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் இந்த தொடரில் ஹைதராபாத் அணி பெறும் முதல் வெற்றியாகவும் இது பதிவானது.

இதற்கிடையில் டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா, நேற்றைய ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி (மூன்று போட்டிகளில்), ஊதா நிறத் தொப்பியை மீண்டும் தனதாக்கினார். மேலும் இப்பட்டியலில் பஞ்சாப் அணியின் முகமது ஷமி ஏழு விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.

ராகுலுக்கு ஆரஞ்சு; ரபாடாவுக்கு ஊதா
ராகுலுக்கு ஆரஞ்சு; ரபாடாவுக்கு ஊதா

அதேபோல் இந்த சீசனில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், 222 ரன்களுடன் (மூன்று போட்டிகளில்) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஆரஞ்சு தொப்பியையும் தன்வசமே வைத்துள்ளார். பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 221 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: நேருக்கு நேர்...! ஆர்ஆர் vs கேகேஆர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.