விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று (அக்.20) நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திம் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார்.
மேலும் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் : கிறிஸ் கெய்ல், கே.எல். ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், முருகன் அஸ்வின், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் : ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மையர், ரிஷப் பந்த், மார்கஸ் ஸ்டோனிஸ், டேனியல் சம்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், துஷார் தேஷ்பாண்டே, ககிசோ ரபாடா.
இதையும் படிங்க: வாய்ப்பைத் தக்க வைக்கும் முனைப்பில் பஞ்சாப்... முதலிடத்தை தக்கவைக்க போராடும் டெல்லி... வெற்றி யாருக்கு?