12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், ராஜஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 188 ரன் இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் எட்டு பவுண்டரி, ஏழு சிக்சர்கள் என 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதில், குறிப்பாக மும்பை அணியின் பந்துவீச்சாளரான அல்ஸாரி ஜோசப் வீசிய 13ஆவது ஓவரை இவர் வெளுத்து வாங்கியுள்ளார். முதல் பந்தில், சிக்சர் அடித்த பட்லர் அடுத்து எதிர்கொண்ட நான்கு பந்துகளையும் பவுண்டரிக்கு பறக்கவிட்டு பின் கடைசி பந்தை சிக்சர் அடித்து அந்த ஓவரை முடித்தார். அந்த ஓவரில் (6,4,4,4,4,6) என மொத்தம் 28 ரன்களை இவர் விளாசியதால், ஆட்டத்தின் போக்கு மும்பை அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு முற்றிலும் மாறியது.
-
WATCH: 6,4,4,4,4,6. When Joseph called for Buttler service
— IndianPremierLeague (@IPL) April 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Full video here 📹📹https://t.co/qNfEnCvJ1b #MIvRR pic.twitter.com/jSex35nbgc
">WATCH: 6,4,4,4,4,6. When Joseph called for Buttler service
— IndianPremierLeague (@IPL) April 13, 2019
Full video here 📹📹https://t.co/qNfEnCvJ1b #MIvRR pic.twitter.com/jSex35nbgcWATCH: 6,4,4,4,4,6. When Joseph called for Buttler service
— IndianPremierLeague (@IPL) April 13, 2019
Full video here 📹📹https://t.co/qNfEnCvJ1b #MIvRR pic.twitter.com/jSex35nbgc
மேலும், ஹைதராபாத் அணிக்கு எதிரான தனது அறிமுக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்த அல்ஸாரி ஜோசப், நேற்றைய போட்டியில் ஒரே ஒவரில் அதாவது ஆறே பந்துகளில் 28 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இதன் மூலம் அவருக்கு இருந்த இமேஜ் ஒரே ஓவரில் டேமேஜ் ஆகியுள்ளதால், அல்ஸாரியிடம் பட்லர் ஐயம் சாரி என கருத்து தெரிவித்திருப்பார் என நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.
அதைத்தவிர, அல்ஸாரி ஜோசப் இப்போட்டியில் மூன்று ஓவர்களில் எந்த விக்கெட்டையும் கைப்பற்றாமல் 53 ரன்களை தந்துள்ளார். ஒட்டுமொத்தத்தில், இப்போட்டியின் மூலம் பட்லர் மீண்டும் ஃபார்முக்கு வந்தது ராஜஸ்தான் அணிக்கு ஹேப்பிதான்.