ஐபிஎல் 12 ஆவது சீசன் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில், பெயரை மாற்றிக்கொண்டு டெல்லி கேபிடல்ஸ் அணி புதுப்பொலிவுடன் களமிறங்கியது. அணியில் ஷிகர் தவானை விட, ரிஷப் பந்த், பிருத்வி ஷா, காலின் இங்ரம், ஸ்ரெயஸ் ஐயர் போன்ற இளம் வீரர்கள் பட்டாளமே டெல்லி அணியில் உள்ளது.
மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் யவ்ராஜ் சிங் இணைந்திருப்பது அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பலப்படுத்தியுள்ளது. மலிங்கா முதல் ஆறுப் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் பும்ரா மீது பொறுப்பு அதிகரித்துள்ளது.
டெல்லி அணி விவரம்: பிருத்விஷா, ஷிகர் தவான், ஸ்ரெயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த், பவுல், காலின் இங்ரம், ராகுல் தெவாட்டியா, அக்சர் படேல், ககிசோ ரபாடா, பொல்ட், இஷாந்த் ஷர்மா
மும்பை அணி விவரம்: ரோஹித் ஷர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், யுவ்ராஜ் சிங், குருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட்,பென் கட்டிங், மிட்சல் மெக்லகன், பும்ரா, ரசிக் சலாம்.