ETV Bharat / sports

சென்னையில் கொடி நாட்டுமா கொல்கத்தா?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் வலிமையான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது.

author img

By

Published : Apr 9, 2019, 3:02 PM IST

CSK

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் சென்னை, கொல்கத்தா ஆகிய இரு அணிகளும் விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றி ஒரு தோல்வி என புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், சுப்மன் கில் மற்றும் அதிரடி மன்னன் ரஸல் என மிரட்டலான பேட்டிங் வரிசையைக் கொண்டு மிகப்பெரிய இலக்கையும் எளிதாக துரத்தி வென்றுவருகிறது. அதேபோல், பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, பிரசித் கிருஷ்ணா, ஹார்ரி குர்னே ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். இதனால் பலவீனமில்லாத அணியாக வலம்வருகிறது.

CSK
கொல்கத்தா

சென்னை அணியைப் பொறுத்தவரையில் வாட்சன், டூ பிளஸிஸ், தோனி, ஜாதவ் ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் ஆறுதலளிக்கின்றனர். சின்ன தல ரெய்னா மற்றும் ராயுடு ஃபார்மில் இல்லாததால் சேஸிங்கின்போது சென்னை அணியை பலவீனமடைகிறது. பந்துவீச்சில் ஹர்பஜன், தாஹிர், தீபக் சாஹர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திவருகின்றனர். இறுதி ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பிராவோவுக்கு பதிலாக புதிதாக இணைந்த குஜ்லஜின் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கை அளிக்கிறார்.

CSK
டூ ப்ளஸிஸ்

இரு அணிகளும் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்குவதால் இந்தப் போட்டியில் மைதானத்தின் தன்மைப் பொறுத்தே வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் என கூறப்படுகிறது. சென்னை அணி இதுவரை வென்ற நான்கு போட்டிகளில் மூன்றில் முதலில் பேட்டிங் ஆடியுள்ளது. சேஸ் செய்வதில் சென்னை அணி தொடர்ந்து தடுமாறி வருவதால், வெற்றிபெற டாஸ் முக்கிய பங்காற்றும் என பார்க்கப்படுகிறது.

அதிரடி வீரர் ரஸல் ஒவ்வொரு போட்டியில் தனது தாக்குதல் ஆட்டத்தினால் கொல்கத்தா அணிக்கு சாதகமாக மாற்றுவதால் ரஸலைக் கட்டுப்படுத்துவதில் சென்னை வீரர்களுக்கு மிகப்பெரிய போராட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் சொந்த மண்ணில் மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

CSK
ரஸல்

தோனியின் மேஜிக் கொல்கத்தா அணிக்கு எதிராக செல்லுபடியாகுமா என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மேலும், கொல்கத்தா அணி தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணிக்கு சவால் விடுத்திருந்தது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆவலை தூண்டியுள்ளது.

Intro:Body:

CSK vs KKR preview

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.