லண்டன்(இங்கிலாந்து): இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (ஆக. 12) தொடங்கியது.
இப்போட்டியில் மூன்று நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களும், இங்கிலாந்து அணி 391 ரன்களும் எடுத்துள்ளது.
முறிந்தது ஓப்பனிங்
இந்நிலையில், இன்றைய (ஆக. 15) நான்காம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. இங்கிலாந்து அணியை விட 27 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில், கே.எல். ராகுல் - ரோஹித் சர்மா இணை களமிறங்கியது.
கடந்த இன்னிங்ஸில் நூறு ரன்களைச் சேர்த்த ராகுல், இந்த இன்னிங்ஸில் 5 ரன்களிலேயே மார்க் வுட் பந்துவீச்சில் வீழ்ந்தார். இதையடுத்து, இந்திய அணி 27 ரன்களை எடுத்து சமநிலை பெற்றது.
அந்த சமயத்தில், மார்க் வுட் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் ரோஹித் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கு இரண்டு பந்துகளுக்கு முன்னர்தான் அதே ஷார்ட் பிட்ச் பந்தில் ரோகித் சிக்ஸர் அடித்தது குறிப்பிடத்தக்கது.
கோலி மீண்டும் ஏமாற்றம்
அடுத்து களமிறங்கிய விராட் கோலி, புஜாரோவோடு ஜோடி சேர்ந்தார். புஜாரா சந்தித்த 34 பந்துகள் வரை ஒரு ரன் கூட எடுக்காத அளவிற்கு பொறுமையாக விளையாடினார். கோலி விரைவாக ரன் சேர்த்து வந்தார்.
இதையடுத்து, சாம் கரன் வீசிய ஒரு அவுட் சைட் ஆஃப்-ஸ்டம்ப் பந்தை, கோலி வழக்கம் போல் தனது ஸ்ட்ரோக்கை ஆட பந்து கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. இதனால், கோலி 4 பவுண்டரிகள் உள்பட 20 ரன்களை எடுத்து வெளியேறினார்.
-
Lunch at Lord's on day four 🍲
— ICC (@ICC) August 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The hosts take control of the match with three crucial wickets in the session. #WTC23 | #ENGvIND | https://t.co/rhWT865o91 pic.twitter.com/5gF7GVnfs8
">Lunch at Lord's on day four 🍲
— ICC (@ICC) August 15, 2021
The hosts take control of the match with three crucial wickets in the session. #WTC23 | #ENGvIND | https://t.co/rhWT865o91 pic.twitter.com/5gF7GVnfs8Lunch at Lord's on day four 🍲
— ICC (@ICC) August 15, 2021
The hosts take control of the match with three crucial wickets in the session. #WTC23 | #ENGvIND | https://t.co/rhWT865o91 pic.twitter.com/5gF7GVnfs8
புஜாரா - ரஹானே
இதன்மூலம், நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நிறைவுபெற, இந்திய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை சேர்த்து, இந்திய அணியை விட 29 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
புஜாரா 3 ரன்களுடனும், ரஹானே 1 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும், சாம் கரன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
முதல் செஷன்: இந்திய அணி - 25 ஓவர்கள் - 56/3