திருவனந்தபுரம்: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. விசாகப்பட்டினம் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவர் வரை சென்று த்ரில் வெற்றி பெற்றது.
-
Lights 💡
— BCCI (@BCCI) November 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Camera 📸
..And expressions on point 😎
BTS from #TeamIndia's Headshots session in Trivandrum 👌👌#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/GOqDMC1Cu2
">Lights 💡
— BCCI (@BCCI) November 26, 2023
Camera 📸
..And expressions on point 😎
BTS from #TeamIndia's Headshots session in Trivandrum 👌👌#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/GOqDMC1Cu2Lights 💡
— BCCI (@BCCI) November 26, 2023
Camera 📸
..And expressions on point 😎
BTS from #TeamIndia's Headshots session in Trivandrum 👌👌#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/GOqDMC1Cu2
அந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 80 ரன்களும், இஷான் கிஷன் 58 ரன்களையும் விளாசினர். இவர்களது பார்ட்னர்ஷிப் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. குறிப்பாக மிடில் ஆர்டரில் களம் இறங்கிய ரிங்கு சிங் பதற்றமின்றி விளையாடி இறுதியில் சிக்சர் விளாசினார்.
இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணி, 2வது போட்டியில் விளையாட கடந்த 24ஆம் தேதி திருவனந்தபுரம் சென்றடைந்தது. அதனை அடுத்து தீவிர வலைப்பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், 2வது போட்டியை முன்னிட்டு அணியின் வீரர்கள் அனைவரும் போட்டோ ஷூட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இது தொடர்பான காணொலி காட்சியை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
போட்டோ ஷூட் நிகழ்ச்சியில் வீரர்களின் தனிப்பட்ட முகபாவனைகள் அனைத்தையும் படம் பிடித்து பிசிசிஐ வெளியிட்டு உள்ளது. போட்டோ ஷூட்டுக்காக வீரர்கள் கொடுக்கு முக பாவனைகள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தங்களுக்கு பிடித்த வீரர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினால்.. அது தங்கம் மாதிரியானது" - ரவிச்சந்திரன் அஸ்வின்!