சென்னை: 16வது ஆசியக் கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி இன்று (செப்.17) நடந்தது. இதில் இந்திய அணி மிக எளிதாக இலங்கை அணியை வீழ்த்தி, தனது 8வது ஆசியக் கோப்பை கைப்பற்றியது. இந்திய அணி கடைசியாக 2018-இல் ஆசியக் கோப்பையை வென்றது. என்னதான் 6 முறை இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றிருந்தாலும், இந்த 2023-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையை அவர்களால் மறக்க முடியாது. அவர்கள் மட்டும் அல்ல, கிரிக்கெட்டை உற்று நோக்கும் எவராலும் மறக்க முடியாத ஒன்றாக மாறி இருக்கிறது.
-
For his stunning 6⃣-wicket haul in the #AsiaCup2023 Final, Mohd. Siraj bagged the Player of the Match award 🏆#TeamIndia beat Sri Lanka to clinch the Asia Cup title (in ODIs) for the SEVENTH time 👏 👏
— BCCI (@BCCI) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard ▶️ https://t.co/xrKl5d85dN #INDvSL pic.twitter.com/4X96RPtEFr
">For his stunning 6⃣-wicket haul in the #AsiaCup2023 Final, Mohd. Siraj bagged the Player of the Match award 🏆#TeamIndia beat Sri Lanka to clinch the Asia Cup title (in ODIs) for the SEVENTH time 👏 👏
— BCCI (@BCCI) September 17, 2023
Scorecard ▶️ https://t.co/xrKl5d85dN #INDvSL pic.twitter.com/4X96RPtEFrFor his stunning 6⃣-wicket haul in the #AsiaCup2023 Final, Mohd. Siraj bagged the Player of the Match award 🏆#TeamIndia beat Sri Lanka to clinch the Asia Cup title (in ODIs) for the SEVENTH time 👏 👏
— BCCI (@BCCI) September 17, 2023
Scorecard ▶️ https://t.co/xrKl5d85dN #INDvSL pic.twitter.com/4X96RPtEFr
இப்படி ஒரு இறுதிப் போட்டி அமையும் என்று எவரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். இதற்கு முக்கிய காரணம், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். அவரது ஆக்ரோஷமான பந்து வீச்சால் இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரையும் வெளியேறச் செய்தார். இதனால் இலங்கை அணியால் வெறும் 50 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் மிக குறைந்த ஸ்கோர்: இலங்கை அணி ஒரு இன்னிங்ஸில் மிகக் குறைந்த ஸ்கோரை எடுத்த அணிகளின் பட்டியலில் 10வது இடத்தில் இடம் பிடித்துள்ளது. இது இலங்கை அணிக்கு ஒரு மோசமான சாதனை ஆகும். முன்னதாக ஜிம்பாப்வே அணி 35, அமெரிக்கா 35, கனடா 36, ஜிம்பாப்வே 38, இலங்கை 43, பாகிஸ்தான் 43, ஜிம்பாப்வே 44, கனடா 45, நமீபியா 45 ரன்களுடன் ஒரு மோசமான நிகழ்வுப் பட்டியலில் உள்ளனர்.
இதில் இலங்கை அணி இரண்டு முறை ஒருநாள் போட்டிகளில் மிகக் குறைந்த ஸ்கோரை எடுத்துள்ளது. ஒன்று 2012-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் 43 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது 2023 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
-
This is the biggest win for India in ODI history with balls remaining.
— Johns. (@CricCrazyJohns) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
- 263 balls left.....!!!! pic.twitter.com/FkOMPyyRg8
">This is the biggest win for India in ODI history with balls remaining.
— Johns. (@CricCrazyJohns) September 17, 2023
- 263 balls left.....!!!! pic.twitter.com/FkOMPyyRg8This is the biggest win for India in ODI history with balls remaining.
— Johns. (@CricCrazyJohns) September 17, 2023
- 263 balls left.....!!!! pic.twitter.com/FkOMPyyRg8
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சாதனைகள்: முகமது சிராஜ் இலங்கைக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 7 ஓவர்கள் வீசி, 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக, அவர் வீசிய இரண்டாவது ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்து, ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அதேபோல் குறைந்த பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சமிந்த வாஸுடன் இணைந்துள்ளார்.
இந்த போட்டியின்போது சிராஜ் 50வது விக்கெட்டை வீழ்த்தினார். இது ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் வீசிய 1,002வது பந்து வீச்சில் நிகழ்ந்தது. இதன் மூலம் அவர் ஆசியக் கோப்பையில் வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார். முன்னதாக, அஜந்தா மெண்டிஸ் 847 பந்தில் அவரது 50வது விக்கெட்டை வீழ்த்தி, இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
மேலும், இவர் இலங்கைக்கு எதிராக எந்தவொரு பந்து வீச்சாளரும் நிகழ்த்தாத சாதனையை செய்துள்ளார். 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள், இது அவர் வீசிய சிறந்த ஸ்பேல் ஆகும். இதன் மூலம் இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்திய பந்து வீச்சாளர் சிராஜ் ஆவார். இதற்கு முன்பு 1993 ஹிரோ கோப்பை இறுதிப் போட்டியில் அனில் கும்ப்ளே 12 ரன்கள் கொடுத்து, 6 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
வேகப்பந்து வீச்சளர்களின் சாதனை: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு போட்டியில் பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது, இது இரண்டாவது முறையாகும். முன்னதாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் பத்து விக்கெட்டையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சாதனைகள்: ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஓவர்களில் ஆட்டம் முடிவடைந்ததில் இந்த போட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 129 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட இந்த போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.
அதே போல் அதிக பந்துகள் எஞ்சிய நிலையில், இந்திய அணி வெற்றி பெற்று ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் 263 பந்துகள் எஞ்சிய நிலையில், இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 2003ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 226 பந்துகள் எஞ்சிய நிலையில், ஆஸ்திரேலிய அணி வென்று சாதனையைப் படைத்தது. இந்த சாதனையை இப்போது இந்திய அணி உடைத்து எறிந்துள்ளது. இது போன்று அதிக பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது இந்திய அணிக்கு இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க: Asia Cup Final 2023: 8வது முறையாக சாம்பியனான இந்திய அணி!