ETV Bharat / sports

62 பந்துகளில் சதம் விளாசிய ஸ்டீவ்... இந்தியாவுக்கு 375 ரன்கள் இலக்கு! - பும்ரா

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 375 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

australia-sets-a-target-of-375-runs-for-india

author img

By

Published : Nov 27, 2020, 1:31 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டி இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் - ஃபின்ச் இணை இந்திய பந்துவீச்சாளர்களை சிதறடித்தது. 10 ஓவர்களில் 51 ரன்களை சேர்த்த இந்த இணை, 20 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் கடக்க, ஆஸி.வின் ரன்கள் வேகமாக உயரத் தொடங்கியது. இந்த இணையின் பார்ட்னர்ஷிப் 150 ரன்களை கடந்தது. பின்னர் அதிரடிக்கு மாறிய வார்னர் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சதம் விளாசிய ஃபின்ச் - அரைசதம் விளாசிய வார்னர்

அவரைத்தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் - ஃபின்ச் இணை சேர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிதறடித்தது. இரண்டு நாள்களுக்கு முன் ஸ்டீவ் ஸ்மித் கூறியதைப் போல், தொடக்கம் முதலே சரியான ரிதமில் அதிரடியாக ஆடினார். இதன்பலனாக 36 பந்துகளிலேயே அரைசதம் அடித்து அசத்த, மறுபக்கம் ஃபின்ச் சதம் விளாசினார்.

பின்னர் அவர் 114 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழக்க, ஆஸி. அணி 40 ஓவர்களுக்கு 264 ரன்களை எடுத்தது. தொடர்ந்து வந்த ஸ்டோய்னிஸ் ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் - ஸ்டீவ் ஸ்மித் இணை இணைந்தது.

சாஹல் ஓவரில் மேக்ஸ்வெல் ஏற்கனவே பலமுறை ஆட்டமிழந்துள்ளார் என்பதால், கேப்டன் கோலி சாஹலிடம் பந்தை கொடுத்தார். ஆனால் அந்த ஓவரில் மட்டும் மேக்ஸ்வெல் இரண்டு சிக்சர் உள்ப்ட 20 ரன்களை சேர்த்தார்.

சாஹல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய மேக்ஸ்வெல்

இதனால் ஆஸி. அணி 43 ஓவர்களில் 300 ரன்களை கடந்தது. அதிலிருந்து ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியும், சிக்சருமாக இருவரும் விளாச, ரன்கள் மின்னல் வேகத்தில் எகிறியது.

ஒரு கட்டத்தில் ஆட்டம் டி20 போட்டிகளை போல் மாறியது. வீசும் பந்துகள் எல்லாமே பவுண்டரி லைனுக்கு சென்றது. 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல், மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த லபுஷான் 2 ரன்களில் வெளியேற, ஆஸி.யின் ரன் வேகம் குறைந்தது.

மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்திய ஷமியுடன் இந்திய அணி

தொடர்ந்து சில ஓவர்களை இந்திய அணியினர் கட்டுக்கோப்பாக வீசினர். இதனை உணர்ந்த ஸ்டீவ், சைனி வீசிய 48ஆவது ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் விளாசி, மீண்டும் அதிரடிக்கு திரும்பினார். இதையடுத்து 62 பந்துகளில் சதம் விளாச, ஆஸி. அணி 49 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் சேர்த்திருந்தது.

கடைசி ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு பவுண்டரி மட்டும் அடித்துவிட்டு 105 ரன்கள் எடுத்து போல்டானார். பின்னர் அந்த ஓவரில் மேலும் 2 ரன்கள் சேர்க்க, இந்திய அணிக்கு 375 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பாக ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிங்க: ரசிகர்களின் உருக்கமான அஞ்சலியுடன் மரடோனாவின் உடல் நல்லடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.