மும்பை: ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கிறது. இதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது.
-
Coming 🆙 next 👉 #INDvAUS
— BCCI (@BCCI) September 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here are the #TeamIndia squads for the IDFC First Bank three-match ODI series against Australia 🙌 pic.twitter.com/Jl7bLEz2tK
">Coming 🆙 next 👉 #INDvAUS
— BCCI (@BCCI) September 18, 2023
Here are the #TeamIndia squads for the IDFC First Bank three-match ODI series against Australia 🙌 pic.twitter.com/Jl7bLEz2tKComing 🆙 next 👉 #INDvAUS
— BCCI (@BCCI) September 18, 2023
Here are the #TeamIndia squads for the IDFC First Bank three-match ODI series against Australia 🙌 pic.twitter.com/Jl7bLEz2tK
அந்த வகையில், ஆசிய அணிகள் ஆசிய கோப்பை தொடர் விளையாடியது. அதில் இந்தியா - இலங்கைக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தனது 8வது ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, இந்திய அணி வரும் செப்டம்பர் 22ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் விளையாட உள்ளது.
அதன் படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி செப்டம்பர் 22ம் தேதியும் 2வது போட்டி 24ம் தேதியும், 3வது போட்டி 27ம் தேதியும் நடைபெற்ற உள்ளது. இந்நிலையில், இன்று (செப்.18) இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளில் மற்றும் கடைசி போட்டியில் விளையாடும் அணிகளை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் இரு போட்டிகளில் கேப்டனாக கே.ல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், முதல் இரண்டு போட்டிகளுளில் இந்திய முன்னனி வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் சூழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டு. அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, வாஷ்ங்டன் சுந்தர் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மிகவும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்த தொடரில் இணைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் இத்தொடரின் கடைசி போட்டியில் முதல் இரு போட்டிகளில் ஒய்வளிக்கப்பட்ட ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முன்னனி வீரர்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இத்தொடரிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான அணி விவரம்: கேஎல் ராகுல் (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர்.
கடைசி ஒருநாள் போட்டிக்கான அணி விவரம்: ரோஹித் சர்மா, சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (உடற்தகுதியை பொருத்து), ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர்.
இதையும் படிங்க: Ravichandran Ashwin: அஸ்வினுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு.. மனம் திறந்த ரோஹித் சர்மா!