ETV Bharat / sports

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் - இந்திய மகளிர் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!

India Women vs England Women Test Cricket: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 347 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 3:35 PM IST

Updated : Dec 16, 2023, 3:44 PM IST

மும்பை : இங்கிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் மற்றும் ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. முதலில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்ற நிலையில், முதல் இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து மகளிர் அணி முறையே 38 ரன்கள் மற்றும் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த டிசம்பர் 14ஆம் தேதி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்சில் 104 புள்ளி 3 ஓவர்களுக்கு 428 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுபாஷ் சதீஷ் 69 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் ஜேமியா ரோட்ரிக்ஸ் 68 ரன், விக்கெட் கீப்பர் யஷ்டிகா பாட்யா 66 ரன், தீப்தி ஷர்மா 67 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக நாட் ஸ்கவர் பிரன்ட் மட்டும் 59 ரன்கள் சேர்த்தார். டெனியல் வியாட் 19 ரன், விக்கெட் கீப்பர் ஏமி ஜோன்ஸ் 12 ரன்கள் எடுத்தனர்.

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். 35 புள்ளி 3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 136 ரன்களுக்கு சுருண்டது. இந்திய மகளிர் அணி தரப்பில் வீராங்கனை தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஸ்னே ரானா 2 விக்கெட்டும், பூஜா வஸ்ட்ரகர், ரேனுகா சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

292 ரன்கள் முன்னிலையுடன் இந்திய மகளிர் அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அபாரமாக விளையாடிய இந்திய தொடக்க வீராங்கனைகள் ஷாபாலி வர்மா (33 ரன்), ஸ்மிரிதி மந்தனா (26 ரன்) முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர். சீரான இடைவெளியில் இந்திய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் (44 ரன்) நிலைத்து நின்று விளையாடி அணி 150 ரன்களை கடக்க உதவினார்.

மூன்றாவது நாள் முடிவில் இந்திய மகளிர் அணி 42 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து இருந்தது. தொடர்ந்து இந்திய வீராங்கனைகள் டிக்ளேர் அறிவித்து இங்கிலாந்து வீராங்கனைகளை விளையாட பணித்தனர். 478 ரன்கள் இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து வீராங்கனைகள் 4வது நாளில் விளையாடத் தொடங்கினர்.

இலக்கு பெரியதாக இருந்தாலும் அதைத் துரத்திச் செல்ல இங்கிலாந்து வீராங்கனைகளுக்கு போதிய கால நேரம் இருந்தது. இருப்பினும் அவசரகதியாக விளையாடிய இங்கிலாந்து வீராங்கனைகளை அவசரப்பட்டு மோசமான ஷாட்டுகளை அடித்து தங்களது விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.

இந்திய சுழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அபாரமாக பந்துவீசிய இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா, எதிரணி வீராங்கனைகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். 27 புள்ளி 3 ஓவர்களில் இங்கிலாந்து மகளிர் அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெடுகளையும் இழந்தது.

ஒரு நாளுக்கு முன்னதாகவே போட்டியை முடித்த இந்திய மகளிர் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா 4 விக்கெட்டும், பூஜா வஸ்ட்ரகர் 3 விக்கெட்டும், ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டும், ரேனுகா சிங் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இரண்டு இன்னிங்சிலும் முறையே 5 மற்றும் நான்கு விக்கெட்டுகள் என மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய தீப்தி ஷர்மா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.. தீபக் சாஹர், முகமது ஷமி திடீர் விலகல் - காரணம் என்ன?

Last Updated : Dec 16, 2023, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.