ETV Bharat / sports

இரட்டை சதம் மட்டுமா மேக்ஸ்வெல் சாதனை? - மனம் திறந்த வீரரின் உலகக் கோப்பை சாதனை பட்டியல்!

Glenn Maxwell: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

maxwell-opens-up-about-scoring-a-double-century-for-the-first-time
மேக்ஸ்வெல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 10:37 AM IST

Updated : Nov 8, 2023, 11:46 AM IST

மும்பை: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஆஸ்திரேலியா அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், மேக்ஸ்வெல்லின் அபார இரட்டை சதத்தால் 46.5 ஓவர்களில் 293 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி அரையிறுத்திக்கு தகுதி பெற்றது.

  • How the cricket world reacted 🤩

    Legends like Adam Gilchrist, Sachin Tendulkar, Wasim Akram and many others turned to social media to laud Glenn Maxwell's astonishing innings 👏#CWC23 | #AUSvAFGhttps://t.co/KzWDt11URW

    — ICC (@ICC) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து ஆட்ட நாயகன் மேக்ஸ்வெல் கூறுகையில், “நாங்கள் ஃபீல்டிங் செய்தபோது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால், என்னால் அதிகமாக உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. அணி சரிவில் இருந்த போதும், பாசிட்டிவ் மைண்ட்செட்டில் இருந்தேன்.

மேலும் எங்களது பேட்டிங் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதே நேரத்தில் எனது வழக்கமான ஷாட்டுகளை ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். வெற்றிக்கான வாய்ப்பே இல்லாத ஒரு போட்டியில் ஒரு சான்ஸ் எடுத்து ஆடியதில் மகிழ்ச்சி. இது எனக்குப் பெருமையாக உள்ளது. எப்போதுமே எங்கள் அணிக்கு நம்பிக்கை அதிகம். அது இந்த போட்டியின் மூலம் மேலும் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.

சாதனைகள்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 128 பந்துகளில் 201 ரன்கள் ரன்கள் குவித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார், மேக்ஸ்வெல். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் வீசிய வீரர்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சேஸிங் செய்யும்போது அதிக ரன்களை குவித்தவர். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸ்சர்கள் விளாசிய வீரர், தற்போது வரை 43 சிக்ஸர்கள். அதேபோல் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய வீரர் அடித்த தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

போட்டி சுருக்கம்: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆப்கான் அணி 50 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடிய இப்ராஹிம் 129 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, ஆப்கான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 91 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்த நிலையில், தனி ஆளாக நின்ற மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்கள் விளாசினார். இதில் 21 பவுண்டரிகளும்,10 இமாலய சிக்ஸர்களும் அடங்கும். இதனால் ஆஸ்திரேலியா அணி 46.5 ஓவர் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 293 எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:"ஆடம் ஜம்பாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு" - ஆரோன் பிஞ்ச்!

Last Updated : Nov 8, 2023, 11:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.