ETV Bharat / sports

உலகக் கோப்பையை வெல்லுமா இந்தியா? கங்குலி கூறுவது என்ன? - Latest Sports news in tamil

Sourav ganguly: 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணிக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன என்பது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

australia-south-africa-can-pose-tough-challenge-to-india-says-sourav-ganguly
உலக கோப்பையை வெல்லுமா இந்தியா? அணிக்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன? கங்குலி ஓபன் டாக்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 1:54 PM IST

லக்னோ: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பங்களாதேஷ்- நெதர்லாந்து போட்டியைக் காண வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி உலகக் கோப்பை குறித்து பேசுகையில், "நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இப்படி விளையாடும் என்று நான் ஒரு போதும் நினைக்கவில்லை. இந்திய அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டிக்குள் நுழையும் என்று பலர் நினைக்கின்றனர்.

இருப்பினும் கோப்பையைக் கைப்பற்ற நாம் முதலில் அரையிறுதியைக் கடக்க வேண்டும். இதற்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கடும் சவாலாக இருப்பார்கள். ஹர்திக் பாண்டியா, அணியின் மிக முக்கியமான வீரர். தற்போது, காயத்திலிருந்து மீண்டு வரும் பாதையில் அவர் உள்ளார். தற்போது, அவர் அணியில் இல்லாவிட்டாலும் இந்திய அணி வலிமையானதாகவே உள்ளது” என்றார்.

பங்களாதேஷ்- நெதர்லாந்து போட்டி குறித்துப் பேசுகையில், “தற்போது பங்களாதேஷ் அருகில் உள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றதால் ஏராளமான ரசிகர்கள் வந்து இருந்ததைப் பார்க்க முடிந்தது.

நடப்பு உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டது வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்தார். வெற்றி மற்றும் தோல்வி என்பது ஒருவரைச் சார்ந்து நடைபெறாது எனவும் அவர் கூறினார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 29வது போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. லக்னோவில் இந்திய நேரப்படி, இன்று (அக்.29) பிற்பகல் 2 மணியளவில் இப்போட்டியானது தொடங்கப்பட உள்ளது.

இந்திய அணி தனது முதல் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வருகிறது.

இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 1-இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பை ஏறத்தாழ இழந்த இங்கிலாந்து அணி, மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, அரையிறுதி வாய்ப்பை நினைத்துப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "ரோஹித் சர்மா, விராட் கோலி பகுதி நேரமாக பந்து வீச வேண்டும்" - முன்னாள் விக்கெட் கீப்பர் அஜய் ராத்ரா கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.