ETV Bharat / sports

Adam Zampa: ரன்கள் கொடுத்தாலும் அதிக விக்கெட்களை வீழ்த்த வேண்டும்..! ஆட்ட நாயகன் ஆடம் ஜம்பா! - Cricket news

Cricket World Cup 2023: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்குப் பங்களித்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என ஆட்டநாயகன் விருதைப் பெற்ற ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா தெரிவித்துள்ளார்.

Adam Zampa
Adam Zampa
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 6:20 PM IST

லக்னோ: ஐசிசி உலகக் கோப்பை தொடரின் 14-வது லீக் ஆட்டம் நேற்று (அக்.16) லக்னோவில் நடைபெற்று முடிந்தது. இதில் இலங்கை அணியை ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை உறுதி செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நல்ல தொடக்கத்தையே அளித்தது. அவர்கள் தங்களது முதல் விக்கெட்டை இழப்பதற்கு 125 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடி 26 ஓவர்களில் 150 ரன்களை கடந்த அந்த அணி அடுத்த 60 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பாக ஆடம் ஜம்பா 4 விக்கெட்களை வீழ்த்தினார். குறிப்பாக குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரமா விக்கெட்களை கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

இதனால் இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர், மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸின் அரைசதத்தால், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பலாக விளையாடிய ஆடம் ஜம்பா, இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

போட்டியின் முடிவில் ஆடம் ஜம்பாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இது குறித்து பேசிய ஆடம் ஜம்பா, “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இன்று நான் உடலளவில் நன்றாக உணரவில்லை. ஏனெனில் கடந்த ஓரிரு நாட்களாக எனக்கு முதுகுப் பிடிப்பு இருந்தது. ஆனாலும், இன்று சிறப்பாகப் பந்து வீசியுள்ளேன்.

எங்களது அணியின் கேப்டன் இடது கை பேட்டர்களுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னர்களையும் மற்ற வீரர்களுக்கு எதிராக என்னையும் பந்து வீச பயன்படுத்தினார். தனிப்பட்ட முறையில், இந்த ஆட்டத்தில் பந்து வீசியது எனது பெஸ்ட் கிடையாது. இருப்பினும் அணியின் வெற்றிக்குப் பங்களித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னுடைய வேலை மிடில் ஓவர்களில் சிறப்பாகப் பந்து வீசி விக்கெட்களை வீழ்த்த வேண்டும் என்பது தான். ஆனால் கடந்த இரு போட்டிகளில் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. அதனாலேயே எங்களது பந்து வீச்சாளர்கள் கடந்த ஆட்டத்தில் இறுதி நேரத்தில் சிரமப்பட்டனர். ஆனால் இன்றைய ஆட்டத்தில் நான் சிறப்பாகச் செயல்பட்டதாக உணர்கிறேன்.

இந்த வெற்றியை நாங்கள் அப்படியே வரும் போட்டிகளில் கடத்தி செல்ல விரும்புகிறோம். என்னுடைய ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் பரவாயில்லை. விக்கெட்களை வீழ்த்துவது மட்டுமே என்னுடைய நோக்கமாக உள்ளது. மேலும், வர இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நிச்சயம் எங்களுக்குச் சவால் அளிக்கும் விதமாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: AUS VS SL: இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.