ETV Bharat / sports

ICC Ranking: மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி!

ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஐசிசி ஒருநாள் அணிக்களுக்கான தரவரிசை வெளியிடபட்டது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 6:46 PM IST

Updated : Sep 18, 2023, 8:29 PM IST

டெல்லி: இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடிய ஆசிய கோப்பை தொடர் நேற்று (செப்.17) முடிவடைந்தது. அதேபோல், தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதிய 5 ஒருநாள் போட்டி தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், ஐசிசி ஒருநாள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் அணி 115 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா 115 புள்ளிகளுடன் இடண்டாவது இடத்திலும் மற்றும் ஆஸ்திரேலியா அணி 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

நேற்று வரை ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இவர்கள் ஐசிசி உலக கோப்பைக்கு முன்பாக மீண்டும் முதல் இடத்திற்கு வர வேண்டுமானால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க: Mohammed Siraj: ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள்.. வரலாற்று சாதனை படைந்த முகமது சிராஜ்!

அதேபோல் தற்போதைய தரவரிசை படி இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி வர இருக்கும் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றினால் அவர்கள் முதல் இடம் பிடிப்பார்கள். அவ்வாறு முதல் இடம் பிடிக்கும் பட்சத்தில் ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி, அனைத்து வகையான வடிவிலும் இந்தியா அணி முதல் இடம் வகிக்கும்.

உலக தரவரிசையில் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது பாகிஸ்தான் அணி. அவர்கள் முதல் இடத்திலேயே நீடிக்க வேண்டும் என்றால் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் அந்த அணிக்கு சாதகமாக எதேனும் நடக்க வேண்டும். ஏன்னென்றால் ஐசிசி ஒருநாள் உலக கோப்பைக்கு முன்பு பாகிதானுக்கு வேறு ஆட்டங்கள் ஏதும் இல்லை.

இதையும் படிங்க: Asia Cup Final 2023: 8வது முறையாக சாம்பியனான இந்திய அணி!

Last Updated : Sep 18, 2023, 8:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.