இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்பாட்ட வீரரும், விக்கெட் கீப்பருமான ராபின் உத்தப்பா நவம்பர் 11,1985 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை வேணு உத்தப்பா ஹாக்கி விளையாட்டு நடுவராவார்.
ஏப்ரல் 2006 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் ஏழாவது அறிமுகமானார் ராபின் உத்தப்பா. தொடக்க வீரராகக் களம் இறங்கிய இவர், 86 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒருநாள் பன்னாட்டுத் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அறிமுக வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச ரன் எனும் சாதனையைப் படைத்தார்.
தி வாக்கிங் அசாசின்
இவர் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் முறையினால் 'தி வாக்கிங் அசாசின்' எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். 2007 ஐசிசி உலக டி20 போட்டித் தொடரில் இந்திய அணி வெற்றி பெற மிகமுக்கிய பங்காற்றினார். 2014-2015 ஆம் ஆண்டிகளுக்கான ரஞ்சிக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.
2008 இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த தொடரில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார். இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய முதல் போட்டியில் 38 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடிய இவர் 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டுவைன் பிராவோவுடன் இணைந்து 123 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து முக்கிய போட்டியில் அணியை வெற்றி பெறச் செய்தார்.
விருதும், சோர்வும்
2009 ஆம் ஆண்டின் இந்திய பிரீமியர் லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 42 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் எடுத்தார். மற்ற போட்டிகளில் நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தத் தவறினார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், இரண்டாவது அதிவேக 50 ரன்கள் இதுவாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதுபெற்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார். இந்தத் தொடர் முழுவதும் 14 போட்டிகளில் விளையாடி 374 ரன்கள் எடுத்தார். 27 ஆறுகள் அடித்துள்ளார். இந்தத் தொடரில் அதிக ஆறுகள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
ராபின் உத்தப்பா விளையாட்டு விவரங்கள்
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்!